• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாடு
  2015-09-03 13:55:56  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாடு 3ஆம் நாள் காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியன் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தி முப்படையின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் நாள், ஜப்பான் சரணடையும் ஆவணத்தில் கையொப்பமிட்டது. ஜப்பானிய இராணுவ வெறியின் தோல்வியையும் உலக பாசிச எதிர்ப்புப் போரின் இறுதி வெற்றியையும் இது குறிக்கின்றது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒன்றை அங்கீகரித்து, செப்டம்பர் 3ஆம் நாளை, ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி நினைவு நாளாகக் கொண்டாட உறுதிப்படுத்தப்பட்டது.

 3ஆம் நாள் நடைபெற்ற மாநாட்டில், தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கியுன் ஹூய் அம்மையார், ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் உள்ளிட்ட 60 வெளிநாடுகளின் தலைவர்களும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சீன அரசுத் தலைவர் மாநாட்டில் உரை நிகழ்த்திய போது, தவறான எண்ணம், பாகுபாடு, பகைமை மற்றும் போர், மனிதருக்குத் துன்பத்தையும் சீற்றத்தையும் மட்டும் கொண்டு வரும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சக வாழ்வில் ஈடுபட்டு, அமைதியாக வளர்ந்து, கூட்டு செழுமையை நாடுவதன் மூலம் தான் இன்பத்தைக் கொண்டு வர முடியும் என்று கூறினார். அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். 3 இலட்சம் படைவீரர்களைச் சீனா குறைக்கும் என்று அவர் அறிவித்தார்.

இம்மாநாட்டில் மொத்தம் 50 பிரிவுகள், அணி வகுப்பில் கலந்து கொண்டன. 12 ஆயிரம் வீரர்களும், 500க்கும் மேற்பட்ட ஆயுதச் சாதனங்களும், சுமார் 200 விமானங்களும் இவற்றில் இடம்பெற்றன. சீனாவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட ராணுவ தாளவாடங்கள் 27 பிரிவுகளாகவும் 200 விமானங்கள் 10 பிரிவுகளாகவும் அணி வகுப்பில் பங்கெடுத்தன. தற்போது சீனாவின் விமானப் படையின் முன்னேறிய போர் விமானங்களும் காப்புறுதி விமானங்களும் அவற்றில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040