• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மர்மமான மன்னர் க்சேர் கதைப்பாடல் கலை
  2015-09-07 19:47:03  cri எழுத்தின் அளவு:  A A A   
"மன்னர் க்சேர்" என்னும் கதைப்பாடல், உலகளவில் புகழ்பெற்ற மிக நீளமான ஒரேயொரு உயிருள்ள வரலாற்று கவிதை ஆகும். கிழக்கு ஹொமரெக் வரலாற்றுக் கவிதையாக அழைக்கப்பட்ட "மன்னர் க்சேர்" பற்றிய பாட்டுக் கலை, சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் வரவேற்கப்பட்டது. இந்தப் பாட்டுக்கலை, முன்னதாக வாய்மொழி மூலம் பரவி வந்தது. தற்போது, தொடர்ந்து இக்கலையைப் பாதுகாத்து பரப்ப வேண்டியது, உள்ளூர் மக்களின் மிக முக்கிய பிரச்சினையாகவும், உள்ளூர் பண்பாட்டு வாரியங்கள் செவ்வனே செய்ய வேண்டிய பணியாகவும் உள்ளது.

வடதிபெத் புல்வெளியில் அமைந்துள்ள நாச்சு பிரதேசத்தில், பரந்து கிடக்கும் பரப்பளவில் குளிர் வானிலையால் உயிர்க்காற்று குறைவாக இருக்கின்றது. இது, மன்னர் க்சேர் பாடிய கலைஞர்களின் சொந்த ஊராகவும், இக்கதைப்பாடல் பரவல் தளமாகவும் இருக்கிறது. நாச்சு பிரதேச விளம்பரப் பிரிவின் துணைத் தலைவர் லீ ஹொங்வெய் செய்தியாளரிடம் பேசுகையில், இப்பிரதேசத்தில் நாட்டுப்புற கதைப்பாடல் கலைஞர்கள் மிகவும் அதிகம் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இந்தக் கதைப்பாடல் கலைஞர்கள் அனைவரும் எழுத்தறிவற்றவர்கள் ஆவர். ஆனால், அவர்களால் மன்னர் க்சேர் கதைப்பாடலை நன்றாகப் பாடமுடியும். ஒவ்வொரு கதைப்பாடல் கலைஞரும் பாடிய மன்னர் க்சேர் கதைப்பாடல்கள் வேறுபட்டவை ஆகும். திபெத்தில் குறிப்பாக நாச்சு பிரதேசத்தில் அவர்களின் பாடல் பாடும் திறமை, கடவுளால் வழங்கப்பட்டது என்று கருதப்படுகிறது. பொதுவாக, திடீர் நோய் ஏற்பட்டு, கனவு கண்டு அல்லது சிறப்பான அனுபவம் பெற்ற பிறகே கலைஞர்கள் கதைப்பாடலைப் பாடும் திறனை திடீரென பெற்றுள்ளனர். இதுவரை, இந்த நிகழ்வு பற்றி அறிவியல் முறையில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மன்னர் க்சேர் என்னும் கதைப்பாடலில், திபெத்தினத்தின் வீரஞ்செறிந்த மன்னரான க்சேர் தீய ஆவிகளைத் தோற்கடித்து மக்களுக்கு நன்மை புரிந்தார். இதுவரை, சீனாவின் திபெத், உள்மங்கோலியா, சிங்காய் ஆகிய இடங்களில் மன்னர் க்சேரின் மாபெரும் சாதனைகளைப் பாராட்டும் கதைப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

ஃபுப்பு என்பவருக்கு, 37 வயது. நாச்சு பிரதேசத்தில் உள்ள மன்னர் க்சேர் கதைப்பாடல் கலைஞர்களும் இவரும் ஒருவர். தன்னுடைய 14 வயது முதல் இக்கதைப்பாடலைப் பாடி வருகின்றார். கதைப்பாடல் பாடிய அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:

என்னுடைய குழந்தை பருவத்தில் ஒரு நாள் நான் மலையில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மலைக்குகையில் துங்கினேன். பிறகு கனவு கண்டேன். கனவில் பலர் கையில் வாளுடன் குதிரைகளில் அமர்ந்து கொண்டு சண்டையிட்ட காட்சியைக் கண்டேன். விழித்த பின், நான் கனவில் கண்ட காட்சிகளை பற்றி பிறரிடம் விளக்கிக்கூற விரும்பினேன். வீட்டுக்குத் திரும்பிய பிறகு, பெற்றொர் மற்றும் உறவினரிடம் நாள்தோறும் இந்தக் காட்சிகளைப் பற்றி பேசினேன். என்னுடைய முற்பிறவியல் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதை போன்று உணர்ந்தேன் என்றார்.

2009ஆம் ஆண்டில் மன்னர் க்சேர் என்னும் கதைப்பாடல் கலை, யுனேஸ்கோ அமைப்பால் மனிதகுலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தேசிய இன பாரம்பரிய பண்பாட்டை நாச்சுப் பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பரவல் பணிக்கான பாராட்டாக இது அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல், மன்னர் கசேர் கதைப்பாடல் கலையின் வளர்ச்சியில் உள்ளூர் மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அது ஊக்குவித்தது.

நாச்சு பண்பாட்டு அரங்கத்தின் தலைவர் டாவாதொன்டுப் செய்தியாளரிடம் பேசுகையில், இப்பிரதேசம், நாட்டுப்புறத்தில் மன்னர் க்சேர் கதைப்பாடல் கலையைத் தொகுத்துப் பதிக்கும் வரலாற்றுப்பணியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு மாவட்டத்திலும் கிராமத்திலும் கதைப்பாடல் கலைஞரைக் கண்டறிந்தவுடனே அவர் பாடிய உள்ளடக்கத்தைத் தொகுத்து பதிவு செய்ய பணியாளரை அனுப்புகிறோம். அதேவேளை, இக்கலைஞரின் தகவலைப் பதிவு செய்து, தனிநபர் பதிவேட்டையும் உருவாக்குகின்றோம். இவ்வாறு, க்சேர் கதைப்பாடல் கலையைப் பரவல் செய்வது மற்றும் பாதுகாப்பது ஆகிய பணிகளுக்காக முறையான அமைப்பு முறையை படிப்படியாக நிறுவலாம் என்று அறிமுகப்படுத்தினார்.

நாச்சு பிரதேசத்தின் பல்வேறு நிலையான அரசாங்கங்கள், க்சேர் கதைப்பாடல் பாரம்பரிய கலையின் பாதுகாப்பு மற்றும் பரவல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றன. உள்ளூரில் க்சேர் பண்பாட்டு குழு நிறுவப்பட்டது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சமூக அறிவியல் கழகத்தின் நிபுணர்கள் க்சேர் கதைப்பாடல் நிலைமையைத் தொகுத்து ஆராய்ந்து வருகின்றனர்.

முதன்முதலில் பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இரண்டாவது, கதைப்பாடல் பாடும் நேரம். குறைந்தது 20 மணி நேரத்துக்கு மேலாக பாட வேண்டும். கடைசியில், பாடலொலியினைத் தனிச்சிறப்பு மிக்க வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் லீ ஹொங்வெய் கூறினார்.

கதைப்பாடல் கலைஞர்கள் அனைவரும் ஆயர் ஆவர். ஊதியம் இல்லை. தற்போது நாச்சு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் படி தரச்சான்று பெற்றுள்ள கலைஞர்களின் எண்ணிக்கை71 ஆகும். அவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

க்சேர் பாரம்பரிய பண்பாட்டைப் பரவல் செய்து பேணிகாப்பதற்கு உள்ளூர் அரசு நிறைய முயற்சி செய்து வருகிறது. இத்தகைய கதைப்பாடல் கலையைப் பெருமளவில் பரவல் செய்யும் வகையில் க்சேர் கதைப்பாடல் கலை, நாச்சு குதிரைப் போட்டி விழாவிலும் அரங்கேற்ற நிகழ்ச்சியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் குதிரைப் போட்டி விழாவில் தலைச்சிறந்த க்சேர் கதைப்பாடல் கலைஞர்கள் ஒன்று கூடி, பயணிகளுக்கு சுவையான வரலாற்றுக் கதைப்பாடலை பாடுகின்றனர்.

ஆனால், கதைப்பாடல் கலையின் பரவல் போக்கில் சில இன்னல்களும் உள்ளது. மேயர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம், கதைப்பாடல் பாடும் திறனைக் கொண்ட போதிலும், சீன மொழி மூலம் பாடுவது கடினம். தற்போது, நாச்சு பிரதேசம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நூலகத்துடன் இணைந்து ஒத்துழைத்து, இந்தக் கலைஞர்களின் அரங்கேற்றங்களை ஒளிப்பதிவு செய்து, எழுத்து மூலம் சீன மொழியில் மொழி பெயர்த்து வருகிறது.

திபெத்தின எழுத்தாளர் அலே, மன்னர் க்சேர் என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். உண்மையான திபெத்தை அறிமுகப்படுத்தி, திபெத்தினரை அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதே அவர் இந்தப் புத்தகத்தை எழுதியதன் முக்கிய நோக்கமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040