• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிங்ச்சி நகரில் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு தொடர்பான புதிய சோதனை பணி
  2015-09-07 19:48:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் கிழக்குப் பகுதியில் நிங்ச்சி(Nyingchi)நகர் அமைந்துள்ளது. தென் சீனாவின் இயற்கைக் காட்சிகள் போன்ற அழகான காட்சிகள் நிங்ச்சி நகரில் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு, கையேற்றல், வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஆகிய துறைகளில் லீன்ச்சி நகர் புத்தாக்கமும் சோதனையும் மேற்கொண்டு, தலைசிறந்த பயன்களைப் பெற்றுள்ளது.

காய் ஹோங் ருய் பெய்சிங்கில் பிறந்தார். அவர் எண்ணெய் ஓவியத்தை கற்றுக்கொண்டார். 2012ஆம் ஆண்டு தனி வடிவமைப்பாளராக அழைப்பை ஏற்று அவர் நிங்ச்சி நகரை வந்தடைந்து, திபெத்தின் கைவினைத் தொழில் வளர்ச்சியின் எதிர்கால வாய்ப்புகளை பற்றி ஆய்வு செய்தார். உள்ளூர் மக்களின் நேர்மை, தங்களது இனத்தின் பாரம்பரியம் மீதான நேசிப்பு, புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது மீதுள்ள ஆசை ஆகியவை காரணமாக, காய் ஹோங் ருய் நிங்ச்சி நகரில் இன்று வரை வாழ்ந்து வருகின்றார்.

சேன் பா கிராமம், நிங்ச்சி நகரிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். காய் ஹோங் ருய் இக்கிராமத்துக்கு வந்த பிறகு, இங்கே பணிமனை ஒன்றை நிறுவினார். இப்பணிமனை, நிங்ச்சி நகரின் திபெத் இன ஆடை மற்றும் நெசவுத் திறன் கையேற்றலுக்கான மாதிரி தளமாக மாறியுள்ளது. நிங்ச்சியின் திபெத் இன ஆடை, குங்பு திபெத் இன ஆடை எனவும் அழைக்கப்படுகின்றது. இது, சீனாவின் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு திட்டப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் 47 பெண்கள் பயிற்சியைப் பெற்ற பின், பல்வகை தையல் தொழில் திறன்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் புத்துணர்வு வடிவமைப்பு, பதனீடு மற்றும் தயாரிப்பு திறன்களைப் பெற்றுள்ளனர். காய் ஹோங் ருயின் வழிகாட்டல் மற்றும் உதவிகள், சேன் பா கிராமத்தில் இப்பணிமனையின் பொறுப்பாளர் பாலுவின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. இவ்வழிக்காட்டல் மற்றும் உதவிகள், சேன் பா கிராமத்தின் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, தங்களது இனத்தின் பாரம்பரியம் பற்றிய அவர்களின் புரிந்துணர்வையும் அதிகரித்துள்ளன. பாலு கூறியதாவது:

"ஆசிரியர் காய் ஹோங் ருய் துணிவு மிக்கவர். உணர்வுப்பூர்வமாக வேலை செய்கிறார். தற்போது இப்பணிமனையில் வேலை செய்யும் கிராமப் பெண்கள் திங்களுக்கு 2700 முதல் 3000 யுவான் வரையான ஊதியத்தைச் சம்பாதிக்க முடியும். முன்பு கிராமப் பெண்கள் வெளியே வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அதிக பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஆசிரியர் காய் ஹோங் ருயின் உதவியுடன், இந்த பெண்கள் பணம் சம்பாதித்துள்ளனர். அதே வேளையில், எங்களது இனத்தின் பாரம்பரியம் செவ்வனே கையேற்றப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது" என்றார் அவர்.

சேன் பா கிராமத்திற்கு வந்த துவக்கத்தில் இக்கிராமத்தின் தோற்றம் காய் ஹோங் ருயின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. சேன் பா கிராமம், மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள், பன்றிப்பட்டிகள் மற்றும் வேலிகள், இயற்கையுடன் நன்றாக ஒன்றிணைந்த அழகுடன் காணப்படுகின்றது. தங்களது கிராமத்தையும் இயற்கையையும் செவ்வனே ஒன்றிணைக்கும் கிராமவாசிகள், அழகு பற்றி தனிச்சிறப்பு வாய்ந்த புரிந்துணர்வைக் கொண்டுள்ளனர் தவிர, இக்கிராமவாசிகள் அன்றாட வாழ்க்கையில் அழகு மீது ஆழ்ந்த உணர்வு கொண்டுள்ளனர். அவர்களுடன் ஒத்துழைத்தால், குங்பு திபெத் இன நெசவு திறனின் கையேற்றல் மற்றும் வளர்ச்சியில் நம்பிக்கை சுடர் தருகின்றது என்று காய் ஹோங் ருய் கருதினார்.

சேன் பா கிராமத்தின் பணிமனை, "திபெத் லீன்ச்சி பாரம்பரிய கைவினை திறன் பண்பாட்டு கையேற்றல் மற்றும் வளர்ச்சி திட்டப்பணியில்" ஒரு பகுதி மட்டுமே. காய் ஹோங் ருய், இத்திட்டப்பணியின் பொது வடிவமைப்பாளராகத் திகழ்கின்றார். 2012ஆம் ஆண்டு, நிங்ச்சி நகரில் இப்பன்முக திட்டப்பணி நடைமுறைக்கு வரத் துவங்கியது. இத்திட்டப்பணியில், பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு, கையேற்றல், வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஒன்றிணைந்த வளர்ச்சி மாதிரி சோதனை முறையில் பரவல் செய்யப்படுகின்றது. சேன் பா கிராமத்தின் நிங்ச்சி திபெத் இன ஆடைகள் மற்றும் நெசவு கைவினை திறன் கையேற்றலுக்கான மாதிரி தளம் உள்ளிட்ட ஆறு தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் நட்டத்தால் மூடப்பட்ட நிங்ச்சி கம்பளி நெசவு ஆலை, இத்திட்டப்பணியின் ஆதரவுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆலை, நவீனக் கலை மணம் வீசும் காட்சி அரங்காக மாறியுள்ளது. கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இக்கம்பளி நெசவு ஆலை உற்பத்தியை மீட்பதற்கு உதவி செய்யும் வகையில், உள்ளூர் அரசு முதலீடு செய்து, இவ்வாலைக்கு உற்பத்தி சாதனங்களை வாங்கியுள்ளது. நிங்ச்சி நகரின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்த ஆலையில் பதனீடு செய்யப்படுகின்றன. சேன் ஜி குவா என்பவர் நிங்ச்சி கம்பளி நெசவு ஆலையின் தலைவராக இருக்கின்றார். அவர் முதன்முறையாக காய் ஹோங் ருய்யைச் சந்தித்த போது, காய் ஹோங் ருய், நிங்ச்சி நகருக்கு வருகை தரும் பயணி என்று கருதினார். கெய் ஹோங் ருய்யுடன் பலமுறை தொடர்பு கொண்ட பிறகு, காய் ஹோங் ருய் பணியில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான சுறுசுறுப்பான மனப்பான்மையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சேன் ஜி குவா கூறியதாவது:

"தொடர்ந்து புத்தாக்கம் செய்து, முன்னணியில் எப்போதும் ஊன்றி நிற்க வேண்டும் என்பது, ஆசிரியர் காய் ஹோங் ருயின் கருத்து ஆகும்" என்றார் அவர்.

காய் ஹோங் ருய், நிங்ச்சி நகருக்கு புதிய சிந்தனை மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு கருத்துக்களையும் தந்துள்ளார் என்று பண்பாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான நிங்ச்சி நகரின் திபெத் இன அலுவலர் யூத்ரோன் அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"காய் ஹோங் ருயின் வருகை, குறிப்பாக அவரது ஒட்டுமொத்த வடிவமைப்பு, நிங்ச்சி நகரின் பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்துள்ளது. நிங்ச்சி நகரில் பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சி அடிப்படை பலவீனமாக இருக்கின்றது. திபெத் இனப் பண்பாட்டு வளத்தை ஒன்றிணைப்பது, திபெத் இனப் பண்பாட்டுத் தனிச்சிறப்புகளை வெளிக்கொணர்வது, பண்பாட்டுத் தொழில் வளர்ச்சி திசையறிவது ஆகியவற்றில் காய் ஹோங் ருய் அதிக பங்காற்றியுள்ளார்" என்றார் அவர்.

சேன் பா கிராமத்தில் உள்ள இம்மாதிரி திட்டப்பணி சுமார் 7 ஆண்டுகள் நீடிக்கின்றன. இம்மாதிரி திட்டப்பணியின் அனுபவம், இதர திட்டப்பணிகளில் பயன்படுத்தப்படலாம். இது வரை இத்திட்டப்பணி 3 ஆண்டுகள் மட்டுமே இயங்கினாலும், இத்திட்டப்பணி மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளார் என்று கெய் ஹோங் ரெய் தெரிவித்தார். இவ்வாண்டு பிற்பாதியில், மின்னணு வணிக மேடையை வழங்கி, ஐரோப்பிய நாடுகளில் தொடர் கண்காட்சியை நடத்தும் என்றும், ஜெர்மனி, இத்தொடர் கண்காட்சி நடைபெறும் முதலாவது நாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040