• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராக்சம்சொ ஏரி பக்கத்திலுள்ள சோ கோ கிராமம்
  2015-09-07 19:49:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் குங்போஜியாம்டா மாவட்டத்தைச் சேர்ந்த சோ கோ என்னும் இடம், ராக்சம்சொ ஏரிஅருகில் அமைந்துள்ள பழைய கிராமம் ஆகும். நூற்றுக்கு மேலான திபெத்தின குடும்பங்கள் பாரம்பரிய திபெத் பாணியுடைய வீடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் தாயகத்தின் உயிரின சூழ்நிலையைப் பேணி மதிப்பிட்டு, சொந்தமான பழைய வீட்டை நேசித்து, ஒன்றுக்கு ஒன்று உதவியளிக்கும் அன்பான பண்டைய பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து பரவல் செய்து வருகின்றனர்.

இரவு நேரம் 9 மணிக்கு, கிராமத்தின் தலைவர் னொர்புசெரிங் ஒரு நாளின் விவசாய வேலைகளை முடித்துக்கொண்டு, தனது வீட்டிலுள்ள ஒலி கருவியைத் திறத்தார். இக்கருவி, கிராமத்திற்கு ஒலி பெருக்கி மூலம் திபெத் பாடலை ஒலிபரப்புகிறது. பல்வேறு குடும்பங்களின் பிரதிநிதிகள் இசையைக் கேட்ட பத்து நிமிடத்துக்குப் பிறகு கிராம குழுவின் அலுவலகத்துக்குச் சென்று கூட்டத்தில் கலந்துகொண்டனர். மலையிலுள்ள புல்வெளிக்குச் சென்று புல்களை வெட்டி, எருமைகளுக்கு குளிர்கால தீனிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்வது பற்றி அவர்கள் விவாதித்தனர். னொர்புசெரிங் இக்கூட்டத்தில் கூறியதாவது:

மத்திய நேரத்தில் ஆடு மாடு மேய்த்துத் திரும்பிய பிறகு, உழைப்பாற்றல் குறைந்த குடும்பங்களுக்கு உதவியளித்திட புல் வெட்டும் வகையில் சிலரை அனுப்பியுள்ளேன் என்றார்.

5 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தலைவராக பதவி ஏற்றப் பின் இதுவரை, நாள்தோறும் காலை னொர்புசெரிங் தனது வீட்டின் விவசாய வேலைகளை முடித்துக்கொண்ட பிறகு, தனது நேரத்தையும் திறனையும் கிராமத்தின் பொது வேலைகளில் பயன்படுத்துகின்றார். சொகொ கிராமத்தைச் சேர்ந்த 105 குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக புகழ்பெற்ற பசுங்சோக் இயற்கை காட்சித் தலத்தின் வடகிழக்கில் சில நூறு ஆண்டுகளாக வாழ்கின்றனர். சிக்கலான குடும்பங்களுக்கு உதவியளிப்பது என்பது, கிராமத்தலைவரின் பொறுப்பு மட்டுமல்ல, இக்கிராமத்தின் பாரம்பரிய பழக்கமுமாகும்.

திபெத் மொழியில், சோ கோ என்பது, ஏரியின் ஊற்று மூலம் என்ற பொருள். நெடுஞ்சாலை தரம் சரியில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவு. கிராமவாசிகள் அமைதியாக வாழ்கின்றனர். குறிப்பாக, இந்தக் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளும் நூறு அல்லது நூற்றுக்கும் மேலான ஆண்டுகால வரலாறுடையது. அரை மரம் அரை கல் என்ற கட்டமைப்புடன் கட்டியமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய திபெத் வீடுகள் இங்கு நன்றாக பாதுகாக்கப்பட்டன. கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் நூற்றுக்கும் கூடுதலான ஆண்டுகால வரலாறுடையன. இவ்வீடுகளின் முதலாவது மாடி பொதுவாக கற்கள் மற்றும் சேற்றைப் பயன்படுத்தி கட்டியமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாடி மரத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால், வெள்ளை கற்சுவர், பழுப்பு மர வீடு, பனிமலை, புல்நிலம், காடு ஆகியவை சேர்ந்து அழகான காட்சியாக தோன்றுகிறது. தற்போது, சோ கோ கிராமம், பசுங்சோ பிரதேசத்தில் வீட்டு பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத ஒரேயொரு இடமாகும். இது குறித்து னொர்புசெரிங் அறிமுகப்படுத்திக் கூறியதாவது:

நாங்கள் தலைமுறை தலைமுறையாக இக்கிராமத்தில் வசிக்கின்றோம். வெளியூரின் புதிய வீடுகளை விட இந்த பழைய வீடுகள் பின்தங்கியவை. ஆனால், தொல்பொருட்களான இவை வரலாற்று மதிப்புடையவை என்று குறிப்பிட்டார்.

உண்மையில் அதிகமான பழைய வீடுகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதால், சோ கோ கிராம வீடுகள் சீராக போவதில்லை. இந்தக் கிராமத்தில் சுற்றுலா வளர்ச்சி மேற்கொள்ளப்பட வில்லை. அதிகால இயற்கை சுற்றுச்சூழல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை நிலைமை மோசமாக இருந்த போதிலும் சொகொ கிராமத்தின் பண்டைய கட்டிடக் காட்சிகள் சில பயணிகளை ஈர்த்து வருகின்றன. அவர்கள் இங்கு திபெத்தின நாட்டுப்புறப் பண்பாட்டை அனுபவித்துக் மகிழலாம். ஜூலை மற்றும் ஆக்ஸ்டு திங்களில் நாள்தோறும் பயணிகள் வாகனம் மூலம் இக்கிராமத்துக்கு வருகின்றனர். உற்சாகமான கிராமவாசிகள் பயணிகளை தங்களது வீட்டுக்கு அழைத்து எண்ணெய் தேநீர் குடிக்க கொடுத்தனர். நன்றி தெரிவிக்கும் வகையில் பயணிகள் அவர்களுக்கு, பொதுவாக காசு கொடுக்கின்றனர். ஆனால், சொகொ கிராமத்தின் வேளாண் மற்றும் மேய்ச்சல் முறையான வாழ்க்கையில் அதிக மாற்றங்கள் காணப்படவில்லை. இந்த வரலாற்றுடைய பழைய வீடுகள், பயணிகளை ஈர்ப்பதோடு, கிராமவாசிகளைப் பொறுத்தவரை சிக்கல் ஏற்பட்டன. குங்போஜியாம்டா மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டித் துணைத் தலைவர் சியா வெய்ஃபாங் கூறியதாவது:

இந்தக் கிராமம், மூந்நூறு நானூறு ஆண்டுகால வரலாறுடையது. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் பேரிடர் வீடுகளாக திகழ்கின்றன. வீடுகளுக்குள்ளே முழுமையாக வலுவூட்டல் அல்லது கிராமவாசிகள் குடியமர்வு, முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

சோமா என்பவர் 66 வயது. அவருடைய வீடு, இரண்டு மாடிகளைக் கொண்ட கற்களால் கட்டியமைக்கப்பட்ட கட்டிடமாகும். முழு கிராமத்தில் அமைந்துள்ள பாரம்பரிய திபெத் பாணியுடைய வீடுகளிலும் இத்தகைய வீடுகள் நான்கு மட்டுமே. முன்னதாக, செல்வ வளமுள்ள குடும்பங்கள் இத்தகைய வீடுகளைக் கட்டியமைக்க முடியும். சோமாவின் குடும்பம் இவ்வீட்டில் தலைமுறை தலைமுறையாக 420க்கு மேலான ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றது. இப்பொழுது இளைஞர்கள் புதிய வீட்டுக்கு குடியமர விரும்புகின்றனர். முதியோர் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சோமா கூறியதாவது:

நான் வயதானவன். குழந்தைகளின் விருப்பத்தின் படி செய்யலாம். நீண்டகாலமாக இந்த பழைய வீட்டில் வாழ்கின்றேன். இந்த வீட்டை விட விரும்பவில்லை என்றார்.

பழைய வீட்டின் நினைவுகள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. குடும்ப வம்சாவழியின் நினைவைக் கொண்டுள்ள பழைய வீடுகள், சோ கோ கிராமத்தின் முதியோர்களைப் பொறுத்தவரை, முக்கியத்துவம் வாய்ந்தவை. வீட்டைச் சீராக்குவது பற்றிய திட்டம் இன்னும் உறுதியாக உருவாக்கப்படவில்லை. குங்போஜியாம்டா மாவட்டத்தின் வீட்டுச் சீராக்க பணியகத்தின் துணைத் தலைவர் வாங்சுங், சீர்திருத்தத்தின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கிக்கூறியதாவது:

சோ கோ கிராமத்தின் வீடுகளில் பெரும்பாலானவை, அரை கல் அரை மரம் என்ற கட்டமைப்புடன் கட்டியமைக்கப்பட்டன. இந்த பள்ளத்தாக்கில் மூன்று கிராமங்களில் இத்தகைய வீடுகள் உள்ளன. சீராக்க பணியில், பாரம்பரிய கட்டிட பாணியைத் தொடர்ந்து பரவல் செய்வதில் முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

புதிய வீட்டில் குடியமர்வோ, பழைய வீட்டில் தங்குவதோ, பசுங்சோக் ஏரி பிரதேசத்தின் அழகான காட்சி மாறாது. சோ கோ கிராமவாசிகளின் சுறுசுறுப்பு மற்றும் அன்பு மாறாது என்று உறுதிப்பட கூறலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040