• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லாலூ சதுப்பு நிலம்
  2015-09-07 19:50:05  cri எழுத்தின் அளவு:  A A A   
பீடபூமியில் நீண்டகால வரலாறு வாய்ந்த லாசா நகரிலுள்ள லாலூ சதுப்பு நிலம், உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான, மிகப் பெரியநகர் இயற்கை சதுப்பு நிலமாகும். அதன் பரப்பளவு, 12.2 சதுர கிலோ மீட்டராகும். இது, லாசா நகர் பிரதேசத்தின்10 விழுக்காடு நிலப்பரப்பைத் தாண்டியுள்ளது.பிராணவாயு குறைந்த குளிர்காலத்தில், லாலூ சதுப்பு நிலம், வட திபெத்தில்இடம்பெயரும் பறவைகள் தங்கியிரும் இடம் ஆகும். அது மட்டுமல்லாமல், பிராணவாயு வினியோக ஊற்றுவாயும் ஆகும். அது, லாசாவின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.துவக்கத்தில்மேய்ச்சல் நிலமாகயிருந்து பிறகு, நாட்டு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமான, லாலூ சதுப்பு நிலத்தில் என்ன மாற்றங்கள் காணப்பட்டுள்ளன? லாசா நகருக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்குகள் என்ன?

நீங்கள் கேட்பது, ஒரு பக்கத்திலுள்ள சாலையில் போக்குவரத்து ஒலியும், மறு பக்கத்திலுள்ள சதுப்பு நிலத்தில் பறவைகளின் ஒலியும் ஆகும். லாசா நகரின் முக்கிய பாதைக்கு அருகில், கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில் நகரால் சுழப்பட்டுள்ள லாலூ சதுப்பு நிலம் மனிதகுலத்தின் வளர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருப்பது என்பது, உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியங்கள் எதிர்நோக்கிய முக்கிய இன்னல் ஆகும்.அப்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தலைவர் சாங்யோங்சே, 1998ஆம் ஆண்டு தாம் முதல்முறையாக லாலூ சதுப்பு நிலத்திற்குச் சென்று பார்த்த நிலைமைப் பற்றி கூறுவதாவது,

அப்போதைய சதுப்பு நிலத்திலும் அதற்கு அருகிலும், அதிகமான உள்ளூர் மக்கள் குதிரையை வளர்த்து, பயணிகளை வரவழைக்க முயற்சி மேற்கொண்டனர். அதன் வடக்கு பகுதியில், பல மலைகளுக்கு அருகில் கற்களைத் தோண்டினர். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோம் என்று அவர் கூறினார்.

2005ஆம் ஆண்டு ஜுலை திங்கள், அரசவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, லாலூ சதுப்பு நிலம், நாட்டு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமாக உயர்ந்துள்ளது. அதிலுள்ள 6.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவான மையப் பகுதி பொது மக்கலுக்குமூடப்பட்டு, மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.நகரில் சதுப்பு நிலத்தின் ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைஇந்நடவடிக்கை உத்தரவாதம் செய்துள்ளது. அதோடு, இதன் மூலம், இப்பிரதேசத்திலுள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு பாதுகாப்பான சூழல் வழங்கப்பட்டுள்ளது. லாசா நகர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் ஹேகுய்ச்சின் பேசுகையில், லாலூ சதுப்பு நிலம், சீனாவின் ஏ நிலை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கான கருப்பு கழுத்து நாரை குளிர்காலம் கடக்கும் முக்கிய இடமாக மாறியுள்ளது.

முன்பு, இங்கே இயற்கையான மேய்ச்சல் தளமாகும். மக்கள், இங்கே ஆடுமாடுகளை மேய்த்தனர். தொழுவங்களைக் கட்டியமைத்த பிறகு, இங்குள்ள புள்வெளிமிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. குளிர்காலம் வரும் போது, இங்கே தங்கியிருக்கும் கருப்பு கழுத்து நாரை, பட்டை தலை வாத்து முதலிய விலங்குகளின் எண்ணிக்கை 5000ஐ எட்டியுள்ளது என்றார்.

இடம்பெயரும் பறவைகள் தங்கியிருக்கும் இடங்களைப் பாதுகாக்க, சதுப்பு நிலத்தை ஈரப்படுத்த வேண்டும். முழு ஆண்டிலும், லாசாவில் மழை பெய்யும் நேரம், முக்கியமாக ஜூன் முதல் செப்டம்பர் திங்கள் வரை இருக்கின்றது. மழைப் பொழிவு அளவு, லாலூ சதுப்பு நிலத்தின் தேவைக்கு போதுமானதல்ல. குளிர்காலம், இங்கு வறட்சி காலமாகும். சதுப்பு நிலத்தில் நீர் பற்றாக்குறை நிலை கடுமையாக இருக்கிறது. ஹேகுய்ச்சின் பேசுகையில், இந்த இன்னலைச் சமாளிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக, லாசா நகரின் அரசு, அதிகமான நிதித் தொகையை ஒதுக்கீடு செய்து, மூன்று பிரதானகால்வாய்களை அமைத்துள்ளது. லாசா ஆற்றிலிருந்து நீரை எடுத்துச்சென்று, லாலூ சதுப்பு நிலத்திற்கு கொட்டியான நீர் வினியோக முறைமையை உருவாக்கியது.

லாலூ சதுப்பு நிலத்திற்கு, இயற்கை மழை மட்டும்போதாது. தற்போது 3 கால்வாய்கள் மற்றும் ஓர் ஆற்றின் மூலம் நீர்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், பிரதான கால்வாய்களில் குப்பையைக் கையாளும்பணியைஅரசு வலுப்படுத்தி, சதுப்பு நிலத்திற்குச் செல்லும் நீர் தூய்மையாக இருப்பதை உத்தரவாதம் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, அன்றாட பராமரிப்பு, குப்பையைச் சுத்தம் செய்வது முதலிய துறைகளில் லாசா அரசு ஆண்டுதோறும் சுமார் 40 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்கிறது என்று ஹேகுய்ஜின் கூறினார்.

லாசா நகர் பிரதேசத்திலுள்ள லாலூ சதுப்பு நிலம், இந்நகரின் உயிரின வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதகுலம் நெருக்கமான நகர் பிரதேசத்துக்கு அருகில் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளில், இந்த இயற்கைச் சூழல் முறைமை, நகர வாழ்க்கை வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தின் அறைகூவலை எதிர்நோக்கி வருகின்றது. ஆனால், அறிவியல்பூர்வமான, பயனுள்ள நிர்வாகத்துடன், லாலூ சதுப்பு நிலத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கைச் சூழல் மற்றும் பல்வகை உயிரினங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தற்போது, லாசா நகரில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும், லாலூ சதுப்பு நிலத்திலிருந்து பயன் கிடைக்கிறது. ஹூநான் மாநிலத்தைச் சேர்ந்த திரு ச்சிங் லாசாவில் பணி புரிந்து, சுமார் ஓராண்டாகியுள்ளது.பணியில் மனநலக் கசப்பு தோன்றிய போது, அவர் லாலூ சதுப்பு நிலத்திற்குச் சென்று, அவருடன் நீண்டகால நண்பர்களான பறவைகளைப் பார்க்கிறார்.

சிலசமயம் எனது மனநிலை நன்றாக இல்லாத போது, அல்லது பணியால் களைப்பாக உணரும் போது, இங்கு பார்வையிட வருவேன். லாசா நகரில் மலையில் மரங்களும் நீரும் குறைவாக இருக்கின்றன. இப்போது, இத்தகைய சதுப்பு நிலம், இங்குள்ள மக்களின் வாழ்க்கைக்கு அதிகமான நன்மைத் தருவது உறுதி. இங்குள்ள காற்று மேலும் நன்றாக இருக்கிறது என்று திரு ச்சிங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040