• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்திலுள்ள மலை ஏறுதல் பள்ளி
  2015-09-07 19:50:44  cri எழுத்தின் அளவு:  A A A   
2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனித தீபத்தை, உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்திற்கு கொண்டு வந்த சீன மலை ஏற்ற அணியின் உறுப்பினர்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனரா? அவர்கள் சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மலை ஏறுதல் பள்ளியில் கல்வி பயின்றனர். 1999ஆம் ஆண்டு இப்பள்ளி நிறுவப்பட்டது முதல் இது வரை, இந்த பள்ளி, 300க்கும் அதிகமான மலைப் பிரதேச வழிகாட்டிகளை பயிற்றுவித்துள்ளது. அவர்கள் பண்பாட்டு அறிவுகளையும், அன்னிய மொழித் திறனையும் கொண்டு, மலை ஏறுதல் தொழில் திறன்களில் தேர்ச்சி பெறுகின்றனர். திபெத் இன மக்கள் வாழும் பிரதேசத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இப்பள்ளி பங்காற்றியுள்ளது.

திபெத்தின் நியலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாசி குங்புவுக்கு வயது 20. கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் இம்மலை ஏறுதல் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இப்பள்ளிக்கு வருவதற்கான காரணம் பற்றி அவர் கூறியதாவது:

"நான் நியலம் மாவட்டத்திலுள்ள பனி மலைப் பிரதேசத்தில் வாழ்ந்தேன். குழந்தை பருவத்தில் மாடுகளை மேய்த்தேன். சிறு வயதிலிருந்தே உயர்ந்த மலையில் ஏற விரும்பினேன். ஜொல்மோ லுங்மா சிகரம், மிக உயர்ந்த மலையாகும் என்று அறிந்து கொண்டுள்ளேன். இப்பள்ளியில் 8 ஆயிரம் மீட்டருக்கு மேலான உயர்ந்த மலையில் ஏறவல்ல பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்பதை அறிந்து கொண்ட பின், இப்பள்ளியில் சேர பதிவு செய்தேன்" என்றார் அவர்.

திபெத்தில் மேம்பாடுடைய மலை வளங்கள் இருக்கின்றன. சாசி குங்பு போல், மலை ஏறுதல் கனவை கொண்டுள்ள குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர். 1999ஆம் ஆண்டு, மலை ஏறுதல் கனவைக் கொண்டுள்ள நிமா சேழேன் திபெத் மலை ஏறுதல் பள்ளியை நிறுவினார். திபெத்தின் ஜொல்மோ லுங்மா சிகரம் மற்றும் சிசபங்மா சிகரம், இப்பள்ளி நிறுவப்பட்டதற்குச் சிறந்த இயற்கைச் சூழலை வழங்கியுள்ள போதிலும், உண்மையில் அவர் இப்பள்ளியை நிறுவுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. நிமா சேழேன் கூறியதாவது:

"முதலில், இப்பள்ளி சீனாவின் உயர்ந்த மலைகளில் சேவையாளர்களின் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இரண்டாவதாக, இமய மலை அமைந்துள்ள பிரதேசம், குறிப்பாக நியலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளை வழங்கும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பது இக்காரணங்கள் ஆகும்" என்றார் அவர்.

தற்போது 42 மாணவர்கள் இம்மலை ஏறுதல் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 5 மாணவிகள் இருக்கின்றனர். அவர்கள் திபெத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். இப்பள்ளியின் ஆசிரியர் சிழேன்டன்தாவின் அறிமுகத்தின்படி, இப்பள்ளியில் பண்பாட்டு அறிவுப் பாடங்களும், மலை ஏறுதல் தொழில் நுட்பப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன. மாணவர்களை, அறிவுகளை கொண்டுள்ள மலை ஏறுதல் வல்லுநர்களாகப் பயிற்றுவிப்பது என்பது, இப்பள்ளியின் நோக்கமாகும் என்று சிழேன்டன்தா தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பண்பாட்டு அறிவுப் பாடங்களில், திபெத் இன மொழி, சீன மொழி, ஆங்கில மொழி, புவியியல், வரலாறு, அரசியல், மலை ஏறுதல் தத்துவம் ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன. தொழில் நுட்பப் பயிற்சியில், பாறை ஏறுதல், கயிறு முடிச்சு ஆகியவை இருக்கின்றன" என்றார் அவர்.

இப்பாடங்களின் ஏற்பாடு குறித்து, பாடங்கள் கடினமாக இருந்த போதிலும், ஆர்வம் தருகின்றன என்று 20 வயதான மாணவர் சாசி குங்பு தெரிவித்தார்.

20 வயதான மாணவர் சிழேன்வாங்துய்யும், நியலம் மாவட்ட்தைச் சேர்ந்தவர். இப்பள்ளியில் கல்வி பயில்வதால் தனக்கு அதிக பயன்கள் கிடைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"எனது வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு சொந்த ஊரில் வாழ்ந்த போது, சீன மாண்ட்ரின் மொழியில் பேச முடியாது. தற்போது மாண்ட்ரின் மொழியில் நன்றாக பேசலாம்" என்றார் அவர்.

இப்பள்ளியின் ஏற்பாட்டுடன், பண்பாட்டு அறிவுகளைக் கல்வி பயில்வதைத் தவிர, குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் மலை ஏறி, பயிற்சி செய்கின்றனர். சிழேன்வாங்துய்யும், சாசி குங்பும் இரண்டு முறை மலை ஏறியுள்ளனர்.

அன்றாட பயிற்சி மற்றும் கல்வியைத் தவிர, திபெத்தின் மலை ஏறுதல் தொழில் நுட்பம் மற்றும் மலை ஏறுதல் தொழில், சர்வதேச வரையறையை எட்டும் வகையில், 2012ஆம் ஆண்டு திபெத் மலை ஏறுதல் பள்ளி, பிரான்ஸின் தேசிய மலை ஏறுதல் மற்றும் பனிச்சறுக்கல் பள்ளியுடன் நீண்டக்கால ஒத்துழைப்புறவை உருவாக்கியது. திபெத் மலை ஏறுதல் பள்ளியை நிறுவியவர் நிமாசேழேன் கூறியதாவது:

"தொழில் நுட்பத் துறையில் எமது பள்ளி, பிரான்ஸ் பள்ளியுடன் அதிக தொடர்பு மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த மலை பிரதேசத்தில் மீட்புதவி பணியை மேற்கொள்ளும் அனுபவத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்" என்றார் அவர்.

இது வரை, திபெத் மலை ஏறுதல் பள்ளியில், 300 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் பண்பாட்டு அறிவுகளைக் கொண்டு, அன்னிய மொழி பேசலாம். மலை ஏறுதல் தொழில் திறனில் தேர்ச்சி பெற்று, மலை ஏறுதல் பண்பாட்டை அறிந்து கொண்டுள்ளனர். அவர்கள் உயர்ந்த மலையில் வழிகாட்டி, ஒருங்கிணைப்பாளர், ஒளிப்பதிவாளர், மீட்புதவிப் பணியாளர், சமையலாளர் அல்லது அன்னிய மொழிப்பெயர்ப்பாளராக வேலை செய்கின்றனர். சீனாவின் மலைகளில் சேவையாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

தவிர, ஆண்டுதோறும் திபெத்தில் ஓய்வு நேர மலை ஏறுதல் ஆர்வலர்களுக்கான மலை ஏறுதல் மாநாடு நடைபெறுகின்றது. திபெத் மலை ஏறுதல் பள்ளியின் மாணவர்கள், சீன மற்றும் அன்னிய மலை ஏறுதல் ஆர்வலர்களுக்கு பல்வகை சேவைகளை வழங்கியுள்ளனர். இதற்கிடையில், மலைகள் அமைந்துள்ள இடங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இப்பள்ளி தனிச்சிறப்பான பங்காற்றியுள்ளது. புள்ளி விபரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், மலைகள் அமைந்துள்ள இடங்களில் வாழும் உள்ளூர் மக்கள், உபசரிப்பு சேவை உள்ளிட்ட முறைகளில், 4 கோடியே 80 லட்சம் யுவான் வருமானத்தை பெற்றுள்ளனர்.

மலை ஏறும் கனவை நனவாக்கிய சாசி குங்பு, அன்றாட கல்வி மூலம், எதிர்காலம் மீது அதிக எதிர்பார்ப்புக் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் தனது ஆசை குறித்து அவர் கூறியதாவது:

"கல்வி பயில நான் பாடுபடுகிறேன். தலைசிறந்த மலை வழிகாட்டியாக வேலை செய்வது எனது விருப்பமாகும்" என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040