• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாஷில்ஹன்போதுறவியர் மடத்தின் ஒரு நாள்
  2015-09-07 19:51:27  cri எழுத்தின் அளவு:  A A A   
தாஷில்ஹன்போதுறவியர் மடம், ஷிகாட்சே நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நிசேர் மலையின் தென் பக்கத்தில் அமைந்துள்ளது. ஷிகாட்சே நகரில் இது மிகப் பெரிய கோயிலாக உள்ளது. தாஷில்ஹன்போதுறவியர் மடத்தில் 900க்கும் திகமான துறவிகள் உள்ளனர். நாள்தோறும் அவர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்காக வழிபாடு செய்கின்றனர்.

1447ஆம் ஆண்டு, குருமார் சோங்கப்பாவின் மாணவர் கெண்டுன் ஸுபா அதாவது முதலாவது தலாய்லாமா பிறப்பித்த கட்டளையின்படி, இத்துறவியர் மடம் கட்டியமைக்கத் துவங்கியது. திபெத் மரபுவழி புத்த மதத்தின் பிரிவான கேலுக் பிரிவின் புகழ் பெற்ற துறவியர் மடம் இதுவாகும். நான்காவது பாஞ்செனும், அவருக்குப் பிந்தைய தலைமுறை பாஞ்சென்களும் இத்துறவியர் மடத்தில் வாழ்ந்து வந்தனர்.

உள்ளூர் மக்கள் புத்தர் சிலைகளை தாஷில்ஹன்போதுறவியர் மடத்துக்கு அனுப்பி மடத்திலுள்ள முக்கிய மண்டபத்தில் சில நாட்களாக வைத்து வீட்டுக்குத் திரும்ப கொண்டு வருவது வழக்கம். அதிலுள்ள மூத்த துறவிகள் மத மந்திரங்களை உச்சரித்து, அவர்கள் கொடுத்த புத்தர் சிலைகளை மேலும் சகிதி உடையதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மேலும் மத நம்பிக்கையாளர்கள் தங்களது பிறந்த நாள் தகவல்களை எழுதி கொடுப்பதுண்டு. துறவிகள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் வழிப்பாடு செய்து, பாதுகாப்பு திறமை இன்பம் ஆகியவற்றைப் பெற முடியும் என்று நம்பப்படுகின்றது.

கியாயாங் 15 வயது முதல் தாஷில்ஹன்போதுறவியர் மடத்தில் 5 ஆண்டுகளாக தங்கியிருந்தார். மனதின் அமைதிக்காக இங்கே வந்து துறவியாக வாழ்வதாக அவர் கூறினார்.

இங்கே அமைதியாக இருக்கிறது. துறவியர் மடத்தில் வாழ்ந்து மனதிலும் அமைதியாக இருக்கின்றது. வெளியுலகில் சர்ச்சைகள் அதிகம் என்று கியாயாங் கூறினார்.

நாள்தோறும் பலர் மடத்துக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இருந்தபோதிலும் துறவிகளின் வாழ்க்கை எளிமையாக இருப்பதாக அவர் கூறினார்.

காலை 5 மணியளவில் எழுகின்றோம். திருமறைகளை சுமார் 3 மணி நேரமாக வாசிக்கின்றோம். இரவிலும் திருமறைகளை வாசிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திருமறைகளை வாசிப்பதைத் தவிர, ஒவ்வொரு துறவியரும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மடத்திலுள்ள ஒழுங்கு நிர்வாகம், உணவுத் தயாரிப்பு, மடத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தல் முதலியவற்றிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். இந்த மருத்துவமனை பற்றி கியாயாங் சிறப்பாக அறிமுகம் செய்தார். அவர் கூறியதாவது

தாஷில்ஹன்போதுறவியர் மடத்திலுள்ள இந்த மருத்துவமனையை சொந்தமாக நிறுவினோம். இங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் மடத்தைச் சேர்ந்த துறவிகள். அவர்கள் சிறப்பாக மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றார் அவர்.

டோசாங் என்ற துறவி தாஷில்ஹன்போதுறவியர் மடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு செய்து வருகின்றார். மடத்தின் உணவுத் தயாரிப்புப் பணிக்கு அவர் முக்கியமாக பொறுப்பேற்கின்றார்.

நான் இங்குள்ள பண்ணை நர்வாகம் செய்கின்றேன். பால் மற்றும் தயிரை நாம் சொந்தமாக தயாரிக்கின்றோம் என்று அவர் கூறினார்.

தாஷில்ஹன்போதுறவியர் மடத்திலுள்ள வாழ்க்கை ஒழுங்காகவும் எளிமையாகவும் உள்ளது. திறுமறை ஆய்வைத் தவிர, துறவிகள் பௌத்த மத வரலாறு உள்ளீட்ட சில பண்பாட்டு பாடங்களைக் கற்றுக்கொள்கின்றனர். மேலும், இதர பிரதேசங்களுடன் பரிமாற்றமும் மேற்கொள்கின்றனர். பல பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக டோசாங் கூறினார்.

சான்துங் மாநிலத்தின் சிங்தாவ், ச்சியாங்சூ மாநிலத்தின் சூட்சோ, ஷான்சி மாநிலம் ஆகிவற்றில் பயணம் மேற்கொண்டுள்ளேன். கல்வி பயிற்சியில் ஈடுபட்டு அனுப்பவங்களை பெற்றுள்ளேன் என்று அவர் கூறினார்.

இதுவரை கியாயாங் திபெத்துக்கு அப்பால் போகவில்லை. ஆனால், மடத்திலுள்ள வாழ்க்கையை அவர் விரும்புகின்றார். 11ஆவது பாஞ்சென் ஒவ்வோர் ஆண்டின் ஆகஸ்ட் முதல் தாஷில்ஹன்போதுறவியர் மடத்தில் 3 திங்கள் வசித்து அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றார் என்று கியாயாங் கூறினார். அவற்றின்மூலம் அதிக சக்திகளை பெறமுடியும் என்று அவர் கருதுகின்றார்.

இவ்வாண்டு கியாயாங்கிற்கு வயது 20. பல இளைஞர்களைப் போல் சமூக வலைத்தளம் மூலம் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள அவர் விரும்புகின்றார். விசாட் இணையத்தில் தாஷில்ஹன்போதுறவியர் மடத்தில் நடைபெற்ற மத நடவடிக்கைகளையும் வழிபாடு செய்யும் பாதையில் அவரது சொந்த உணர்வையும் கியாசாங் அடிக்கடி வெளியிடுகின்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040