• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பாரம்பரிய மருந்து மற்றும் மருத்துவம்
  2015-09-07 19:55:10  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் பாரம்பரிய மருத்துவம், சீனப் பாரம்பரிய மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம், பண்டைய அரபு மருத்துவம் ஆகியவை உலகில் 4 முக்கிய பாரம்பரிய மருத்துவங்களாக அழைக்கப்படுகின்றன. அவற்றுக்கு 3800 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. திபெத் பாரம்பரிய மருந்து மற்றும் மருத்துவம் சீனாவின் தேசிய நிலை பண்பாட்டு மரபுச் செல்வமாகும். நீண்ட வரலாற்றில் எண்ணற்ற நோயாளிகளின் துன்பத்தை இது நீக்கி இதுவரையிலும் மிகவும் உயர்வாக போற்றப்படுகின்றது.

திபெத்தின் தலைநகர் லாசாவின் புறநகரில் யாவ் வாங் என்ற ஒரு மலை உள்ளது. இந்த மலையில் சுமார் 500 வகை மூலிகை மருந்துகள் உள்ளன. டாவாட்சோம் என்ற மாணவர் திபெத் பாரம்பரிய மருத்துவக்கழகத்தில் 3ஆம் வகுப்பில் பயிலுகின்றார். சக மாணவர்களுடன் யாவ் வாங் மலையில் மூலிகை மருந்துகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்.

இது துடிவா. இதற்கு சிறிது நச்சுத்தன்மை உண்டு. அது, கொசா. இன்னொன்றின் பெயர் ட்சூகான் என்று அவர் கையிலுள்ள மூலிகை மருந்துகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

சாவ்வாங் மலை திபெத் பாரம்பரிய மருத்துவக்கழகத்தின் கல்வி பயிற்சி தளமாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டின் ஜுலை திங்கள் இறுதி முதல் ஆக்ஸ்ட் திங்கள் வரை, டாவாட்சோம் போன்று சுமார் 200 மாணவர்கள் இங்கே வந்து மூலிகைகளை அறிந்து கொண்டு சேகரிக்கின்றனர். டாவாட்சோம் கூறியதாவது

நாங்கள் 10 நாட்களாக மூலிகை மருந்துகளைச் சேகரித்துள்ளோம். நடைமுறையில் அவை எல்லாம் பயன்படுத்தப்படக் கூடும். இயல்பான தாவரங்கள் மருந்துகளாகப் பயன்படுத்தப்படலாம். இது தான் திபெத் பாரம்பரிய மருந்துகளின் மேம்பாடாகும் என்றார் அவர்.

அழகான சிங்காய்-திபெத் பீடபூமியில் 2000க்கு மேலான தாவர வகைகள், 190 வகை விலங்குகள், 80க்கு மேலான தாது பொருள் வகைகள் ஆகியவை மருந்துகளில் பயன்படுத்தப்படலாம். நான்கு மருத்துவப் படைப்புகள் என்ற புகழ்பெற்ற திபெத் மருத்துவ படைப்பின்படி, அனைத்து தாவரங்களும் சரியாக பயன்படுத்தப்படுவதால், மருந்துகளாக பயன் தர முடியும். எடுத்துக்காட்டாக, அனைவருக்கும் தெரிந்தவாறு, பாய்பொன் அதிக நச்சு கொண்ட ஒரு தாது வகையாகும். ஆனால், திபெத் பாரம்பரிய மருத்துவக்கழகத்தின் தலைவர் நீமாச்சிரென் அதனை சிறப்பாக மருந்தில் பயன்படுத்தி, பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வெற்றி பெற்றுள்ளார்.

பாய்பொன் மருந்தாக மாறுவதற்கு அதிக தயாரிப்பு முறைமைகள் தேவைப்படுகின்றன. சுமார் 37 நாட்களில், 30க்கு மேலான பணியாளர்கள் இரவிலும் பகலிலும் ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக தயாரிப்பு முறையில் ஈடுபட வேண்டும். மிகவும் சிக்கலான தயாரிப்பு முறைமைகளுக்குப் பிறகு, கறுப்பு நிற மாவு கிடைத்தது. குறிப்பிட்ட அளவில் இது மருந்துகளில் பயன்படுத்தப்படலாம்.

• திபெத் பாரம்பரிய மருந்துகளைப் போல் திபெத் பாரம்பரிய மருத்துவமும் அற்புதமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் டாங்கா என்ற ஓவிய முறையில், மனித உடலின் உறுப்புகளும், அக்குபங்ச்சர் புள்ளிகளும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும், மனித கருவளர்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தோற்றங்களும் தெளிவாக தீட்டப்பட்டன. அவை நவீன மருத்துவத்தின் ஆய்வு முடிவுகளுக்குச் சமமாகும்.

• திபெத் பாரம்பரிய மருத்துவக்கழகத்தில் மனித உடம்பிலுள்ள பாகங்கள், அக்குபங்ச்சர் புள்ளிகள், திபெத் மருத்துவச் சிகிச்சை வசதிகள், திபெத் பாரம்பரிய மருந்துகளின் வகைகள் ஆகியவை இடம்பெறும் 79 டாங்கா ஓவியங்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

• இவ்வோவியத்தில், மரம் போன்ற வடிவத்தில் மனித உடம்பு காட்டப்படுகிறது. எலும்பு, தசை முதலியவை தெளிவாக இதில் காணப்படலாம். இது, 5ஆவது தலாய்லாமா காலத்தில் அதாவது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால், அது பற்றிய தத்துவம் திபெத்தில் சுமார் பல்லாயிரமாண்டு காலமாக உருவாகியது. கருத் தரித்தது முதல் குழந்தையின் பிறப்பு வரை, ஒவ்வொர் காலக்கட்டத்தின் விபரங்களை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். மேலை நாட்டு மருத்துவர்களின் பார்வையிலும் இது மிகவும் அற்புதமானது.

• திபெத் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை பற்றி திபெத் பாரம்பரிய மருத்துவக்கழகத்தின் தலைவர் நீமாச்சிரென் கூறியதாவது

• நடைமுறையில் திபெத் பாரம்பரிய மருத்துவம் இரு பிரிவுகளாக பிரிக்கப்படலாம். ஒன்று நோய் தடுப்பு மற்றும் நீண்ட ஆயுள் வழிமுறை. உளவியல் சிகிச்சை, உணவுச் சிகிச்சை, அன்றாட வாழ்க்கை வழிமுறை ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன. இரண்டு, மருத்துவச் சிகிச்சை வழிமுறை. இதில் 3 பகுதிகள் உள்ளன. முதலாவதாக, பார்த்தல், கேட்டல் முதலியவற்றின் மூலம் நோய் நிலைமையை அறிந்து கொள்வது. இரண்டாவதாக, சிறுநீரின் நிலைமையை அறிந்து கொள்வது. மூன்றாவதாக, சிகிச்சை அளிப்பது என்று அவர் கூறினார்.

• தற்போது இந்தக்கழகத்தில் சுமார் 1500 பட்டத்தாரிகளும் 60 முதுகலை பட்டத்தாரிகளும் 20 முனைவர் மாணவர்களும் உள்ளனர்.

• தற்போது திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 18 திபெத் பாரம்பரிய மருந்து தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. 300க்கு மேலான திபெத் மருந்து வகைகள் சந்தையில் விற்பனை செய்யபடுகின்றன. 2012ஆம் ஆண்டு திபெத் பாரம்பரிய மருந்துகளை பரப்புரை செய்யும் வகையில், திபெத் பாரம்பரிய மருத்துவக் கழகத்தில் பல ஹான் இன மாணவர்களை அனுமதித்து, திபெத் பாரம்பரிய மருந்து விற்பனைவகுப்பை நடத்தத் துவங்கியது.

• திபெத்தில் திபெத் பாரம்பரிய மருத்துவர்கள் உயர் மதிப்பளிக்கப்படும் பதவியாகும். மாணவி தாவாங்ட்சோமும் இவ்வாண்டு 22 வயது. தனது எதிர்கால திட்டம் பற்றி அவர் கூறியதாவது

• திபெத் பாரம்பரிய மருத்துவக் கல்வியில் தொடர்ந்து ஈடுபட விரும்புகின்றேன். இது கடினமான மருத்துவ இயலாகும். மேலும், எதிர்காலத்தில் கிராமப்புறங்களுக்குச் செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் திபெத் பாரம்பரிய மருந்துகளும் மருத்துவமும் மேலும் சிறப்பாக வரவேற்கப்படுகின்றன என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040