• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பழைய கிராமத்தின் புதிய தோற்றம் மற்றும் புதிய வாழ்க்கை
  2015-09-08 08:52:53  cri எழுத்தின் அளவு:  A A A   

கேச்சுங் எனும் கிராமம், திபெத்தின் லோகா மாவட்டத்தின் நைத்துங் வட்டத்தின் சாங் ச்சு நகராட்சியை சேர்ந்த பகுதியாகும். இந்த கிராமத்திற்கு சிவப்பு நிலம் என்ற பெயரும் உண்டு. திபெத்தில் மக்களாட்சி மேற்கொள்ளப்பட்ட முதல் கிராமம், திபெத்தின் வரலாற்றில் முதலாவது கிராமவாசிகள் சங்கம், முதல் மக்கள் உள்ளூராட்சிப் பகுதி உள்ளிட்ட பல புகழ்களை, அது பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்ச்சியில் சீன வானொலி செய்தியாளர்களுடன் இணைந்து கேச்சுங் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள இன்றைய வாழ்க்கையை விரிவாக அறிந்து கொள்கின்றோம்.

கேச்சுங் கிராமத்தைச் சென்றடையும் போது, ஒரு அகலமான மற்றும் சுத்தமான நெடுஞ்சாலை முதலில் செய்தியாளர்களின் கண்களுக்குள் நுழைகின்றது. கிராமவாசிகள் வசிக்கும் வீடுகள் ஒழுங்குமுறையாகவும் நன்றாகவும் வடிடிமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத் தோற்றம் அழகுமிக்கது. வீடுகளின் உள்புறத்தில், திபெத் பாரம்பரிய மற்றும் தனிச்சிறப்புமிக்க சூழ்நிலை நிறைந்திருக்கிறது.

பயணத்தின்போது, செய்தியாளர்கள் முதலில் கிராமவாசி டாவாவின் வீட்டுக்குச் சென்றனர். இவ்வாண்டு டாவாவிற்கு 54 வயது. அவர் தன்னுடைய 7 குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருகின்றார்.

முதல் மகன், திபெத்தின் ஷிகாட்சே மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன், உள்ளூரில் மகிழுந்து ஓட்டுநராக வேலைசெய்து வருகிறார்.

மகள் இவ்வாண்டு ஷாங்காய் ஜியவ்டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு தொடங்கி, டாவா, உள்ளூரில் மகிழுந்து சேவை புரிந்து வருகின்றார். 2014ஆம் ஆண்டின்போது, இவரது குடும்பத்தின் நபர்வாரி வருமானம் 30ஆயிரம் யுவான் ஆகும். நல்ல வருமானம் பெற்றுள்ள டாவா, செய்தியாளர்களிடம் தானே சொந்தமாகவே வடிவமைத்து கட்டியமைத்துள்ள புதிய வீட்டை அறிமுகம் செய்தார்.

கேச்சுங் கிராமத்தில் தற்போது 240 குடும்பங்கள் உள்ளன. தொத்தம் 880 கிராமவாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராத்தின் வேளாண்மை, போக்குவரத்து, வெளியூரில் தொழில் நடத்துவது ஆகிய மூன்று துறைகளும் சீராக வளர்ச்சியடைந்து வருகின்றன. சேவை மற்றும் பதனீட்டு துறை குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. அவற்றின் மூலம், கே ச்சுங் கிராமத்தின் நபர்வாரி ஆண்டு வருமானம் 12ஆயிரம் யுவான் என்னும் நிலையை அடைந்துள்ளது. கேச்சுங் கிராமத்தின் இன்றைய நிலைமை குறித்து, இக்கிராமக் கட்சிக் குழுவின் 6-வது செயலாளராக பொறுப்பேற்றுள்ள பென்பா ட்செரிங் கூறியாவது

கடந்த சில ஆண்டுகளில் கிராமத்தில் பெரும் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முன்பு மாடு, குதிரை போன்ற கால்நடைகள் மூலம் விளைநிலத்தை உழுது பண்படுத்தினோம். தற்போது, இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். கிராமவாசிகள் முன்பு வசித்த வீடுகள், மண் மற்றும் மரப் பொருட்களால் கட்டியமைக்கப்பட்டன. தற்போது, இரும்பு மற்றும் காரை ஆகியவற்றால் புதிய வீடுகள் கட்டியமைக்கப்படுகின்றன. மேலும், பொது மக்கள் அன்றாட வழாக்கையில் பயன்படுத்தும் குடிநீர், மின்னாற்றல், நெடுஞ்சாலை ஆகிய அடிப்படை வசதிகள் பெருமளவில் மேம்பட்டுள்ளன. குழாய் நீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மின்சார விலையும் குறைவு என்று தெரிவித்தார்.

கேச்சுங் கிராமத்தில் வசிக்கும் மற்றொரு கிரமாவாசியான, சோநம் துந்தருப்க்கு, இவ்வாண்டு 66 வயது. 5 பேர் இடம்பெறும் அவரது குடும்பத்தின் நபர்வாரி வருமானம், ஒரு லட்சம் ரூபாய். இரண்டு மகன்கள் குழந்தையாக இருந்தபோது, குடும்பத்தின் வருமானம் குறைவு. இவர், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசின் நிதியுதவியுடன், புதிய வீட்டினைக் கட்டியமைத்துள்ளார். தற்போது, மகன்கள் பணிபுரிந்து வருகின்றனர். குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது, கிராமத்தில் சிறிய மருத்துவகம் அமைக்கப்பட்டுள்ளதால், அது மிகவும் வசதியாக உள்ளது. இந்த சேவை குறித்து சோநாம் துந்தருப் மனமகிழ்ச்சி அடைந்தார். அவர் மேலும் கூறியாவது

கிராமப்புற மருத்துவ ஒத்துழைப்பு அமைப்புமுறையில் நாங்கள் சேர்ந்துள்ளோம். நோயினால் ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கு, கிராமத்திலுள்ள இந்த மருத்துவகத்தில் சிகிச்சை பெறலாம். இதற்காக, தொலைவிலுள்ள பெரிய மருத்துவ மனைக்குச் செல்ல அவசியமில்லை. முன்பு இருந்ததை விட தற்போது வாழ்க்கை நிலை வசதியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

சோநாம் துந்தருப் சொல்வது போல, கடந்த சில ஆண்டுகளில் கேச்சுங் கிராமத்தின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் சுற்றுச் சூழலும் மேம்பட்டுள்ளது.

நல்ல வழக்கம் தொடர்பான பரப்புரை மேற்கொண்ட பிறகு, தற்போது, கிராமத்தின் சுற்றுச்சூழல் புதுமையாக மாறியுள்ளது. கிராமவாசிகள் தாமாகவே குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் கொட்டி தூய்மையைக் கடைபிக்கின்றனர். கழிவுப் பொருட்கள், குப்பை ஆகியவை முறையாகக் கையாளப்படுகின்றன. மேலும், கிராமவாசிகள் கிராமத்தின் சாலைகளை வாரம்தோறும் சுத்தம் செய்வது என்பது முக்கியக் கொள்கையாக உள்ளது. இந்த நடவடிக்கைள், கிராமத்தின் தூய்மையான சுற்றுச்சூழலை உறுதிச்செய்யும் வகையில் அமைந்துள்ளன.

கேச்சுங் கிராத்தின் எதிர்காலம் பற்றி, கிராமத்தின் கட்சிச் செயலாளர் பென்பா ட்சிரிங் தனது திட்டவரைவினைக் கொண்டுள்ளனர். எதிர்காலத்தின் மீது, நம்பிக்கை கொண்டுள்ள அவர் கூறியதாவது

எதிர்காலத்தில், சுற்றுலா தொழில் மூலம் கிராமத்தின் வளர்ச்சியைத் தூண்ட முயற்சி எடுத்து வருகின்றோம். குறிப்பாக, பாரம்பரிய கைவினைத் தொழிலையும் திபெத்தின் சுவைமிக்க உணவுத் தொழிலையும் மறுமலர்ச்சி செய்வோம். கேச்சுங் கிராமத்தின் எதிர்காலம் இனிமையாக இருப்பது உறுதி என நம்பகின்றோம் என்று தெரிவித்தார்.

நேயர்களே, திபெத் தன்னாட்சி பிரதேத்த்தின் பொன் விழா எனும் சிறப்பு நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது. நாளையும் இந்த சிறப்பு நிகழ்ச்சி தொடரும். கேட்க தவறாதீர்கள். நன்றி, வணக்கம்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040