• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழமையும் புதுமையும் நிறைந்திருக்கும் திபெத் இசை
  2015-09-08 08:53:44  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் இனத்தின் பெண்மணி பென்பா தேஜீ, திபெத் மொழியில் பாடும் ஷி ஹுவான் நீ எனும் காணொளி ஒன்று, 2015ஆம் ஆண்டு மார்ச் திங்கள் சீனாவின் இணைதளங்களில் பெரிய அளவில் பரவியது. ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த திபெத் தொழி இசை, பொது மக்களைப் பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர், இந்தப் பாடலில், திபெத் இசை நாடகத்தின் அம்சங்களை சேர்த்து, தனிச்சிறப்புமிக்க பாடலாக மறுசீரமைப்பு செய்து வெளியிட்டார். இசை மூலமாக உலக மக்களிடம் பழமையும் புதுமையும் நிறைந்திருக்கும் திபத்தை வெளிக்காட்டலாம் என்பது அவருடைய விருப்பம்.

இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில், பென்பா தேஜீ மற்றும் அவரது பாடல் குறித்த செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சீன மொழியில, ஷி ஹுவன் நீ, அதாவது உன்னை விரும்புகின்றேன் என்ற பாடல், சீன ஹாங்காங்கின் பியாந்து என்ற இசை குழுவின் படைப்பாகும். பென்பா ஜேஜீயால் திபெத் மொழியில் பாடப்பட்ட இந்தப் பாடல் இணையதளவில் பதிவேற்றம் செய்த சில நாட்களுக்குள், கோடிக்கும் மேற்பட்ட முறையாக கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலைப் பாடியதற்கான காரணம் பற்றி, பென்பா தேஜீ கூறியதாவது

திபெத் பாரம்பரிய புத்தாண்டு விழாக் கொண்டாட்டத்தில், குவாங்துன் மொழி வடிவில் இந்த பாடலை பாடினேன். ரசிகர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்தது. பிறகு, ஒரு புதிய எண்ணம் எனது மனதில் எழுந்தது. அதாவது, திபெத் மொழியில் இந்த பாடலை மீண்டும் பாட வேண்டும் என்பது தான், அந்த எண்ணம்.

திபெத் மொழி மற்றும் காங்துங் மொழியின் உச்சரிப்புமுறை மிகவும் வேறுப்பட்டது. திபெத் மொழியில் இப்பாடலை நன்றாக பாடுவதற்காக, நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன் என்று பென்பா தேஜீ குறிப்பிட்டார்.

இந்த பாடலின் காணொளி இணையதளங்களில் பரவலாக இருந்த பிறகு, பென்பா தேஜீ மற்றும் அவரது இசை குழு முற்றிலும் புதிதாக இசையமைத்து, புதிய பாடலை தயாரித்துள்ளார். பாடலின் தலைப்பு, நிங் து லா என அழைக்கப்படுகிறது.

திபெத் ஆடைகள் மற்றும் நடனம் முதலான திபெத் நாடகத்தின் தனிச்சிறப்புமிக்க காட்சிகளோடு, புதிய பாடலின் காணொளி தொடங்குகின்றது. இவ்வாறு செய்வதன் மூலமாக, திபெத் இனத்தின் பாரம்பரிய கலைகளைக் கொண்டு, மக்களின் கவனத்தை ஈர்க்க பென்பா தேஜீ திட்டமிட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது

திபெத் பராம்பரிய நாடகத்தின் பாடகியாக இருக்கின்றேன். இதைத் தவிரவும், ராக் இசை எனக்கு பிடித்த ஒன்று. எனவே பழைய நாடகம் மற்றும் நவீன இசை ஆகியவற்றை ஒன்றிணைந்தால், மேலதிக கவனத்தை ஈர்க்கலாம் என்று பலர் நினைக்கின்றனர் என்றார் அவர்.

இந்த பாடல் காணொளி, திபெத் இளைஞர்கள் நவீன இசையைப் பின்தொடரும் முன்னேற்றப் போக்கினை வெளிக்காட்டுகிறது என்று தேஹீ குறிப்பிட்டார்.

திபெத் இசை பற்றி கூறுகையில், ,பெய்ஜிங் தே ஜின் ஷான் ஷாங் உள்ளிட்ட சிறந்த பழைய பாடல்களும் தியன் லூ, ட்சோ மா உள்ளிட்ட திபெத் தினம் தனிச்சிறப்புமிக்க பாடல்களும் தொடர்ந்து சீனர் பலரின் மனப்பதிவில் முக்கிய இடம் வகிக்கின்றன. திபெத் இசையின் பராம்பரிய வடிவம் மற்றும் நவீன வளர்ச்சி ஆகியவை பற்றி பலருக்கு நன்றாக தெரியவில்லை. ஆனால், நிங் து லா என்னும் இந்த பாடல் தோன்றிய பிறகு, திபெத் மொழி பாடல், பாப் இசையுடன் இணைந்து உருவானது என்பதை பொது மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

தற்போது, திபெத்தின் தலைநகர் லாசாவிலும், சீனாவின் பிற நகரங்களிலும் நிங் து லா என்னும் பாடலை அடிக்கடி கேட்டு ரசிக்கலாம். இந்த பாடல் மூலம் பலர் பென்பா தேஜீயை அறிந்து கொண்டனர். திபெத் நாடக குழுவின் உறுப்பினாக இருந்த அவர், திபெத் நாடகத்தின் நிகழ்ச்சிகளை இடைநிறுத்த முடியாது. அவர் மேலும் கூறியதாவது

ஆண்டுதோறும் நாங்கள் கிராமப்புறத்திற்குச் சென்று திபெத் நாடக நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது வழக்கம். ஓய்வு நேரம் இருக்கும்போது, இசைப் பணியில் ஈடுபடுவேன். எனக்கு, திபெத் இசை நாடகம் மற்றும் இசைப் பாடல் எல்லாம் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

நிங் து லா இந்த பாடலைக் கேட்கும்போது, திபெத்தின் பழமை மற்றும் இளமையை பாடலில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். எதிர்காலத்தில், மேலதிகமானோர், இசை வழியாக, பழமையும் புதுமையும் இணைந்த திபெத்தை அறிந்துக் கொள்ளும் வகையில், முயற்சி செய்வேன் என்றார். அவர் கூறியதாவது

பிறர் விரும்பும் அதிக பாடல்களைத் தொடர்ந்து பாடுவேன். திபெத்தின் தனிச்சிறப்புமிக்க உள்ளடக்கங்களைச் சேர்த்து இன்றைய இசையில் ஊட்ட விரும்புகின்றேன். அதனால், மேலதிக மக்கள் திபெத்தின் பழைய நாடகத்தை அறிந்து கொண்டு இக்கலையை விரும்புவார்கள் என்றார் தேஜீ.

திபெத் பல்கலைக்கழகத்தின் புல்வெளிப் பகுதியில், திபெத் இனத்தின் பெண் மாணவர்கள் படித்தபோது, நீ து லா பாடல் இசை இசைக்கப்பட்டது.

நேயர்களே, இத்துடன், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொன் விழா எனும் சிறப்பு நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. இறுதியில், திபெத் தனிச்சிறப்புமிக்க நிங் து லா எனும் பாடலைக் கேட்டுரசியுங்கள். அது உங்களுக்குபிடிக்கும் என்று நம்புகின்றோம். நன்றி. வணக்கம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040