• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொன் விழாவுக்கான கொண்டாட்டம்
  2015-09-08 18:38:24  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், திபெத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பிரமுகர்கள் 8ஆம் நாள் முற்பகல் சாலா நகரில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின்த் தலைவருமான யூ செங்ஷேங் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, திபெத்தின் பொன் விழாவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டு, அதன் முதலாவது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தை நடத்தியது. அதனால் திபெத்தின் ஜனநாயக அரசியல் காலம் துவங்கியுள்ளது.

கொண்டாட்ட நிகழ்ச்சியில் யூ செங்ஷேங் உரை நிகழ்த்துகையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருவாக்கம், திபெத்தின் அமைதியான விடுதலை மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தின் பயன்களை வலுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பனி மூடிய பீடபூமியில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய திபெத், ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்கும் முக்கிய கட்டத்தில் உள்ளது. நாட்டின் நிர்வாகத்தில் எல்லை பகுதிக்கான கட்டுப்பாடு இன்றியமையாதது. எல்லை பகுதிக்கான கட்டுப்பாட்டில் திபெத்தின் அமைதி தான் முதலிடம் என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் பணிகளுக்கான தொலைநோக்கு கோட்பாடு என்று கூறினார்.

புள்ளிவிபரங்களின்படி, கடந்த 50 ஆண்டுகளாக, திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 68 மடங்கு அதிகரித்துள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைக்கு வந்த பின், அங்குள்ள நகர மற்றும் கிராமவாசிகளின் வருமானம் 5 மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. திபெத்தின் வளர்ச்சிக்கு நடுவண் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 1952 முதல் 2014ஆம் ஆண்டு வரை திபெத்திற்கு வழங்கிய உதவித் தொகை 60 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

திபெத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி பேசுகையில், நாட்டின் ஒன்றிணைப்பைப் பேணிக்காத்து, தேசிய இன ஒற்றுமையை வலுப்படுத்துவது, திபெத்தின் பல்வேறு இன மக்களின் அடிப்படை நன்மையாகும் என்று யூ செங்ஷேங் குறிப்பிட்டார். அத்துடன், திபெத்திற்கான சிறப்பு கொள்கையை நடுவண் அரசு தொடர்ந்து செயல்படுத்தி முழுமையாக்கி, திபெத்திற்கு உதவியளிக்கும் பணியை செவ்வனே செய்து, திபெத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் சமூக ஆற்றலை அணி திரட்டும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

சட்டப்படி திபெத்தை நிர்வகிப்பது குறித்து யூ செங்ஷேங் கூறுகையில், சட்டப்படி திபெத்தை நிர்வகிப்பது, திபெத்தின் நிரந்தர அமைதியை நனவாக்குவதற்கு அடிப்படை உத்தரவாதமாகும். சட்டப்படி மத விவகாரங்களை நிர்வகிக்க வேண்டும். சட்டப்படி பிரிவினைவாத எதிர்ப்பை மேற்கொள்ள வேண்டும். நமது முயற்சிகளின் மூலம், திபெத்தின் பல்வேறு இன மக்கள் மேலும் அதிகமான வருமானம், மேலும் சிறந்த கல்வி, மருத்துவச் சிகிச்சை, வசிப்பிடம், சமூக காப்புறுதி ஆகியவற்றைப் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040