இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70ஆவது ஆண்டு நிறைவை சீனா கோலாகலமாக்க் கொண்டாடி விட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரில் எஞ்சிய ஏதேனும் ஒன்று திரும்ப கிடைத்தால் மனம் ஆகாயத்தில் அல்லவா மிதக்கும்.
அப்படி, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற அமெரிக்க படை வீர்ர், இண்டியானாவில் உள்ள தனது குடும்பத்துக்கு எழுதிய கடிதம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்குடும்பத்திடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம், உரியவரிடம் அப்போது சேர்க்க முடியவில்லை. முகவரி மாறி அது எங்கேயோ சென்று விட்டது. இக்கடித்த்தை ஒரு கடையிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமந்தா தாம்ப்சன் என்ற பெண்மனி வாங்கியுள்ளார்.
கடித்த்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று தாம்ப்சன் 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து வந்துள்ளார். இறுதியில் அவர் முகவரியைக் கண்டுபிடித்து ராபர்ட் ஸ்டிக்கி என்பவரிடம் சேர்த்துள்ளார். ஸ்டிக்கி, கடிதம் எழுதிய வீர்ரின் மகன்.
இக்கடித்த்தைப் பார்த்த அவரின் முகம் மலரைப் போல மலர்ந்து விட்டது. அதைப் படிக்கும்போது, அவரது தந்தை அருகில் இருப்பதைப் போல உணர்வு அவருக்கு ஏற்பட்டதாம். கடித்த்தின் வாயிலாக நான் பெருமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டார்.
கடிதம் திரும்ப கிடைத்த்தற்காக எனது முழுக் குடும்பமும், தாம்ப்சனுக்கு கடமைப்பட்டுள்ளது. அக்கடித்த்தை அவர் எறிந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
இக்கடித்த்தை எனது பேரக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், எனது தந்தையின் வீரத்தையும், அவரது நினைவையும் என்றும் அழியாமல் காக்க முடியும் என்று ஸ்டிக்கி பெருமையுடன் கூறினார்.