• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
40 கிலோ முடியுடன் சுற்றித்திரிந்த செம்மறி ஆடு
  2015-09-18 18:53:21  cri எழுத்தின் அளவு:  A A A   

செம்மறி ஆடு என்றவுடன் மந்தை மந்தையாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே நமக்கு நினைவுக்கு வரும். அவற்றின் ரோமங்களைப் பார்க்கும்போது, இந்த ஆடுகளுக்கெல்லாம் குளிர்காலத்தில் பிரச்னையே இருக்காது என்று தோன்றும். ஆனால், அந்த ரோமமே ஆட்டின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.

அந்நாட்டு தலைநகர் கான்பெர்ராவில் கிறிஸ் என்ற செம்மறி ஆடு அதிக ரோமத்துடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த்தைப் பார்த்த விலங்குகள் காப்பகத்தார், அதனை காப்பாற்ற முடிவு செய்தனர். அதிக முடியினால், அந்த ஆடு தனது அன்றாட செயல்களைக் கூட செய்வதற்கு மிகுந்த சிரம்மப்ப்ட்டு வந்துள்ளது.

இறுதியில், இயன் எல்கின்ஸ் என்ற ஆடுகளின் ரோமத்தை உரிப்பவர் அந்த ஆட்டை சுமார் 42 நிமிடங்கள் போராடி காப்பாற்றியுள்ளார்.

தனது 35 ஆண்டுகால அனுபவத்தில் இதுபோன்றதொரு கடினமான பணியை நான் புரிந்த்தே இல்லை என்று எல்கின்ஸ் கூறினார் என்றால் அது எத்தனை சிக்கலான செயல் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

முடிகளை எல்லாம் வெட்டி முடித்த பிறகு அதனை எடைப் போட்டு பார்த்தால், அது சுமார் நாற்பதரைக் கிலோவை எட்டியுள்ளது. அது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இத்தனை கிலோ முடியை வெட்டிய எல்கின்ஸ், அதிகாரப்பூர்வமற்ற உலக சாதனையை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஏனென்றால் இதற்கு முன், நியூஸிலாந்தில் பிக்பென் என்ற செம்மறி ஆட்டுக்கு 29 கிலோ எடையிலான முடியை வெட்டியதே உலக சாதனையாக உள்ளது.

உலக சாதனை குறித்து யாரும் கவலைப்படவில்லை. மாறாக கிறிஸின் உயிர் காப்பற்றப்பட்டதை நினைத்து அனைவரும் பெருமை கொண்டனர்.

கிறிஸுனுடைய 40 கிலோ முடி, எந்தப் பயனையும் அளிக்காதாம். ஆனாலும், அது அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படலாம் என்று எல்கின்ஸ் தெரிவிக்கிறார்.

பொதுவாக ஓர் ஆட்டின் ரோமத்தை மழிக்கும்போது சுமார் 5 கிலோ எடையுடைய முடிகள் கிடைப்பது வாடிக்கை. ஆனால், கிறிஸுக்கு 7 ஆண்டுகாலமாக முடி வெட்டாமல் விட்டுவிட்டதே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, எல்கின்ஸுடன், விலங்குகள் நல அதிகாரிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040