• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மைக்ரோசாப்ட் அலுவலகத்தை பார்வையிட்ட சீன அரசுத் தலைவர்
  2015-09-24 19:29:02  cri எழுத்தின் அளவு:  A A A   

உள்ளூர் நேரப்படி 23-ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவருடைய மனைவியும், அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தைப் பார்வையிட்டனர். அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நாதெள்லா, அந்நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்சு முதலியோர், ஷிச்சின்பிங்கின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனாவில் வளர்ந்துள்ள நிலைமை குறித்து, நாதெள்லா ஷிச்சின்பிங்கிற்கு விளக்கிக் கூறினார். தொழில் நுட்ப சாதனைகளைப் பார்த்து ஷிச்சன்பிங் கூறுகையில், சீனாவின் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகரித்து, பொது மக்களுக்கு நன்மை தரும் நுண்மதி நுட்ப உற்பத்தி பொருட்களை அதிகமாக தயாரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

இதனிடையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், 8வது சீன-அமெரிக்க இணைய கருத்தரங்கில் கலந்துக்கொண்ட இரு தரப்புப் பிரதிநிதிகளையும் ஷிச்சின்பிங் சந்தித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040