• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2015-09-26 10:19:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் உள்ளூர் நேரப்படி 25ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின், அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
கடந்த இரு நாட்களில் தாமும் ஒபாமாவும் சந்தித்துரையாடி, பரந்தளவிலான ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளோம் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்துள்ளார்.
ஓரளவு வசதி படைத்த சமூகத்தைப் அனைத்து நிலைகளிலும் கட்டியமைக்க சீனா பாடுபட்டு வருகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். சீனாவில் சீர்த்திருத்தம் நிறுத்தாது. வெளிநாட்டுத் திறப்பு நிறுத்தாது. அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக ஊன்றி நின்று, பல்வேறு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்புறவை வளர்ப்பதில் சீனா ஈடுபட்டு வருகிறது. பெரிய நாடுகளுக்கிடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து சீனா பாடுபடும் என்று ஷி ச்சின்பிங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி அவர் கூறுகையில், அண்டை நாடுகளுடன் அமைதியாகப் பழகுவதை சீனா எப்போதும் விரும்புகின்றது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் சர்ச்சையைச் சமாளிப்பதில் சீனா ஊன்றி நிற்கும் என்றார்.
மேலும், இணையப் பாதுகாப்புத் துறையில் சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவாத்தையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலகளவில் அமெரிக்கா மிகவும் வலுவான இணைய ஆற்றலைக் கொண்ட நாடாகும். சீனாவில் மிக அதிக இணையப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். ஒத்துழைப்பு மூலம் இரு தரப்புகளும் நன்மை பெற முடியும். மனக்கசப்பால், யாரும் வெற்றி பெற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
இரு நாட்டு ஒத்துழைப்பில் முயற்சியுடன் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், உலகிற்கு இது நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார். வர்த்தம், இணையப் பாதுகாப்பு, மனித உரிமை முதலிய துறைகளின் ஒத்துழைப்பு பற்றியும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான பன்முக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை, ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு, காலநிலை மாற்றச் சமாளிப்பு, அமைதிப் பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் பற்றியும் தாமும் ஷி ச்சின்பிங்கும் மனம் திறந்தவாறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். அதன்மூலம் இரு தரப்பும் புரிந்தணர்வை அதிகரித்து, பல முக்கிய பிரச்சினைகளில் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளோம் என்று பராக் ஒபாமா கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040