• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் அமெரிக்க பயணத்தில் படைத்த சாதனைகளில் செய்தி ஊடகங்களின் கவனம்
  2015-09-27 18:28:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணத்தை 25ஆம் நாள் வெற்றிகரமாக முடித்து கொண்டார். பயணத்தின்போது, இரு நாட்டுத் தலைவர்கள், மனம் திறந்த முறையில் ஆழ்ந்த மற்றும் செயலாக்கமான பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்நிலையில், இரு தரப்பும் பரந்த அளவிலான ஒத்த கருத்துக்களை எட்டி, பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளன.

இப்பயணமானது, பிரதேச அளவிலும் உலக அளவிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சீனாவும் அமெரிக்காவும் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களே, இரு தரப்பு ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல், இவை, உலக நாடுகளுக்கு நன்மை அளிக்கும் என்று பல நாடுகளின் நிபுணர்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் கருத்துகள் கூறுகின்றன.

நியூயார்க் டைம்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில், சீன மற்றும் அமெரிக்க தலைவர்கள், உலக வெப்பமயமாதல் பிரச்சினையைச் சமாளிக்கும் ஒத்துழைப்புகளை முனைப்புடன் மேற்கொண்டுள்ளனர். இரு நாடுகள் கருத்துவேற்றுமையை கைவிட்டு, உலக அரங்கில் தத்தமது செல்வாக்கைப் பயன்படுத்தி முக்கிய பிரச்சினையை சமாளிக்கும் வகையில் கூட்டாக முயற்சிப்பதை இது நிரூபித்துள்ளது என்று பாராட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040