• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீ ச்சின்பிங்கின் அமெரிக்கப் பயணம் மீதான சர்வதேச சமூகத்தின் கவனம்
  2015-09-28 09:52:55  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் பயணம், சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, பிரதேச மற்றும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது என்று பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிசிங்கேர் பேசுகையில், அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் சியாட்டில் மாநகரில் நிகழ்த்திய உரை, சீனத் தலைவர் நாட்டை ஆளும் கருத்தைத் தெளிவுபடுத்தி, சீன அரசுத் தலைவர் சீன-அமெரிக்க உறவை வளர்க்க பாடுபடும் உளமார்ந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, சீனாவும் அமெரிக்காவும் இரு தரப்பு ஒத்துழைப்புத் துறையில் பெற்றுள்ள பயன்கள் ஊக்கம் தந்துள்ளன என்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் உள்ள உலக விவகார ஆணையத் தலைவர் ஹலித் மகமுட் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040