• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதார அதிகரிப்பு இலக்குகளை குறைத்து மதிப்பிடும் ஐ.எம்.எப்
  2015-10-07 18:13:12  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான உலகப் பொருளாதார அதிகரிப்பு பற்றிய எதிர்பார்ப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று, சர்வதேச நாணய நிதியம் 6ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்ட உலகப் பொருளாதார எதிர்காலம் என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை இந்த நிதியம் சரிப்படுத்தவில்லை. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் முறையே 6.8 மற்றும் 6.3 விழுக்காட்டு வேகத்துடன் அதிகரிக்கும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளியலாளர் மௌரிஸ் ஒபஸ்ட்ஃபெல்ட் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில்,

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் நிதானமாக மீட்சியடைந்து வருகிறது. ஆனால், பிற நாடுகளின் பொருளாதார அதிகரிப்பில் தற்போது ஒளிமிக்க எதிர்காலம் காணப்படவில்லை. பல வளரும் நாடுகளிலும், பெருமளவு வணிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், சீனப் பொருளாதாரம் பற்றி அவர் குறிப்பிட்டபோது,

முன்பு, ஏற்றுமதி மற்றும் முதலீடு ஆகியவற்றை தலைமையாக கொண்டுள்ள சீனா, தற்போது, நுகர்வை அதிகரிப்பின் முக்கிய உந்து ஆற்றலாக கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சியின் மாற்றம், அவசியமாகவும் சீராகவும் உள்ளது. அதேசமயம், சீனாவின் முனைப்பான நிதிக் கொள்கை மற்றும் அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கான முதலீடு ஆகியவற்றுடன், சீனப் பொருளாதாரம் நிலைப்புத் தன்மையுடன் வளர்ந்து வருகிறது என்றும் கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040