• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுவாங்ஜோ நகரப்பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள்
  2015-10-09 16:41:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆடு, மாடுகள்சாலைகளில் திரிவது; சேவல்கூவும்சத்தம்; மாலை வேளைகளில் கழனியிலிருந்து சோர் வாகமண் வெட்டியுடன் சாலையில் வந்துகொண்டிருக்கும் விவசாயி; ஒருநாளில் 2 அல்லது 3 முறை புகையைக் கக்கியபடி வரும் பேருந்து என மேற்கூறியபடி எல்லாம் இருந்தால் அது என்ன இடம் என்று நாம் யோசிக்க வேண்டியதே இல்லை. உலகமயமாக்க லின்பிடியில் சிக்காமல் இருக்கும் ஒரு அழகிய கிராமம் என்று பட்டென நாம் பதில் அளித்து விடுவோம். ஆனால், அந்தப்பதில் சீனாவின் புஜியன் மாநிலத்தில் உள்ள ஜுவாங் ஜோ நகரப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு பொருந்தாது. காரணம்- தமிழ் கூறும் ஐவகை நிலங்களில் ஜுவாங் ஜோநகர் வருவது நெய்தல்பகுதியில் (கடலும்கடல் சார்ந்த இடமும்). அதனால், இங்கு விவசாயமோ, கால்நடை வளர்ப்புத் தொழிலோபிரதானம்கிடையாது.

காலணி தயாரிப்பது மிகவும் பிரதானமான தொழில். 2015ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களில் காலணி (ஷு) முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. அதில், புஜியன் மாநிலத்திலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கவை. அதனைத்தொடர்ந்து, டைல்ஸ், செராமிக்ஸ், மார்பல்ஸ் போன்றரகக் கற்களின் உற்பத்தி, மீன் இறைச்சி வர்த்தகம் எனமக்கள் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.

கிராமவீடு ஓலைக்குடிசை என்பதெல்லாம் வேறுபகுதியில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஜுவாங் ஜோ நகர்புறங்களில் அமைந்துள்ள அந்தோமற்றும்டாங்சன் கிராமங்கள் அந்தரகத்தைச் சேர்ந்தவைஅல்ல. அக்கிராமங்களுக்குச் சென்றால் கிராமத்தில்நடந்து செல்கிறோம் என்ற உணர்வு ஏற்படவாய்ப்பில்லை. ஒருமா வட்டத்தில் காணக் கூடிய அனைத்து வசதிகளையும் இந்தகிராமங்களில் அனுபவிக்கமுடியும்.

கிராமத்தில் அமைந்திருக்கும் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்த்தால், அது நகரின் மையப்பகுதி தான் என்றேதோன்றும். திங்சிபோ என்பவர துமாவ்டோய் சோல்ஸ் என்ற காலணியின் அடிப்பகுதியைத் தயாரி்க்கும் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து உலகின் பலநாடுகளுக்கும் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைக் கேட்கும்போது சீனாவின் வளர்ச்சியை உணரமுடிகிறது.

தனது தந்தைக்கு அடுத்து திங்சிபோ இந்நிறுவனத்தை தலைமை ஏற்றுநடத்தி வருகிறார். பெரியநிறுவனத்துக்கு தலைவர் என்றாலும், பணியாளர்களுக்கும் திங்சிபோவுக்கும் இடையே வேற்றுமை கிடையாது. யாரும் யாருக்கும் வணக்கம் செலுத்துவதில்லை. தங்களது வேலை மீதுமட்டுமே பணியாளர்கள் கவனத்துடன் இருக்கின்றனர்.

டொங்சன் கிராமத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இதை கிராமம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா என்று சந்தேகம் எழும். அங்கு செல்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயல்பு தான். ஏனென்றால் நகர்ப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகளை இக்கிராமம் நம்கண்முன் நிறுத்துகின்றது. மிகச்சரியாகத் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ள கிராமம். கிராமத்தை எப்படி கட்டமைப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அனைவருக்கும் சிறந்தவசதிகளுடன் கூடிய வீடு எனும் அடிப்படையில் நன்கு திட்டமிட்டப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மானியவிலையில் இந்த வீட்டினைப்பெறும் கிராமவாசி, அதற்கான தொகையை சிறிதுசிறிதாக அரசுக்குகட்டி வருகின்றார். இக்கிராமத்தில் வசிக்கும் முதியோர்களின் அக்கறையில் நலனைகாட்டும் அரசு, மாலை வேலைகளில் அவர்கள் கூடிவிளையாடுவதற்கான உள்விளையாட்டு அரங்கை அமைத்துள்ளது. 5 ஆயிரம்புத் தகங்களுக்கும் அதிகமாக உள்ள நூலகம், சகலவசதிகளையும் கொண்ட கிராமநிர்வாக அலுவலகம், கிராமத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படக் கருவி என ஒருநகருக்கு சமமாக இக்கிராமம் விளங்குகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புறம் அச்சாணிபோன்றது.

வளர்ச்சி கிராம்ப்புறங்களிலும் சாத்தியம் என்பதை சீனா நிரூபித்துவருகிறது. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் கிடைக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040