• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு முதலீட்டுக்கு வசதியளிக்கும் சீனாவின் நடவடிக்கை
  2015-10-13 15:34:19  cri எழுத்தின் அளவு:  A A A   
திறப்புத் தன்மையுடைய பொருளாதாரக் கட்டமைப்பின் உருவாக்கத்துக்கான சில கருத்துக்கள் எனும் ஆவணத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் அண்மையில் கூட்டாக வெளியிட்டுள்ளன. இதில், வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்கும் புதிய நடவடிக்கைகள் 50 துறைகளிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளன. நிபுணர்களின் பார்வையில், புதிய காலகட்டத்தில் சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான உயர் நிலை திட்டம் என கருதப்படக் கூடிய இந்த ஆவணம், சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தரப்புக்கு வசதியளித்து, சீனப் பொருளாதார வளர்ச்சி மீதான எதிர்பார்ப்பை நிலைநிறுத்தும்.

நாட்டின் பாதுகாப்பைப் பேணிகாக்கும் முன்நிபந்தனையில், முதலீட்டுச் சூழ்நிலையை மேம்படுத்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கத் தொழில் உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு முதலீடு நுழைவதற்கான கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைப்பது, பங்கு பத்திரத் துறையில் பங்கீட்டு கட்டுப்பாட்டை ஒழுங்கான முறையில் தளர்த்துவது, வங்கித் துறையின் வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றுவது, வெளிநாட்டு முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளைச் சரிப்படுத்துவது, ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய பிரதேசங்களின் மீதான திறப்பு அளவை விரிவாக்குவது முதலியவை இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சீன தற்காலச் சர்வதேச உறவு ஆய்வகத்தின் அறிஞர் சென் ஃபெங்யிங் பேசுகையில், சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின் வெளிநாட்டுத் திறப்புக்கான உயர் நிலைத் திட்டம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. இதனால் சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு, புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று கூறினார். மேலும், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரென்மின்பி மாற்று விகிதத்தை உறுதிப்படுத்தும் அமைப்பு முறையின் மாற்றம் ஆகியவை சீனாவில் ஏற்பட்ட போது, சீனா கதவை மூடிக் கொண்டு பின்னடைவைச் சந்திக்கும் எனச் சந்தேகம் எழுந்தது. அதற்கு நல்ல பதிலாக இத்திட்டம் அமைகிறது. வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையைச் சீனா தொடர்ந்து பன்முகங்களிலும் வலுப்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டுத் திறப்பு பற்றிய இந்த ஆவணம் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் திங்கள் வெளியிடப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொழிலுக்கான வழிகாட்டிப் பட்டியலில் வெளிநாட்டு முதலீட்டின் மீதான கட்டுப்பாடுகள் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் லியன் வெய்லியாங் கூறுகையில், தொடர்புடைய நடவடிக்கைகளின் பயன்களைப் பார்த்தால், சீனாவில் முதலீடு செய்வதன் மீது வெளிநாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040