• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவை ஆழமாக அறிந்து கொள்ளும் பிரிட்டன் பண்பாட்டுத் துறையின் வேண்டுகோள்
  2015-10-19 16:01:48  cri எழுத்தின் அளவு:  A A A   

அக்டோபர் 19ஆம் நாள் தொடங்கி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரிட்டனில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இப்பயணத்தின் போது, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உற்சாகமான வரவேற்பு, சீன-பிரிட்டன் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. தவிரவும், பயணத்தின்போது, பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் பிரிட்டனின் பல துறைகள் மிகுந்த கவனத்தில் கொண்டுள்ளன.

பிரிட்டன் பண்பாட்டுச் சங்கம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், வில்லியம் சேக்சுபியர், பிரிட்டனின் மிகப் புகழ்பெற்ற பண்பாட்டுச் சின்னமாக கருதப்படுகிறார். இத்துடன், சீனாவில், குறிப்பாக, சீன இளைஞர்களுக்கு மிகவும் பழக்கமான பிரமுகர்கள், சேக்சுபியர், பிரிட்டிஷ் அரசி, டேவிட் பெக்காம்(இங்கிலாந்து கால்பந்து முன்னாள் வீரர்)ஆகிய மூவர் ஆவர்.

அது மட்டுமல்லமால், சேக்சுபியர் எழுதிய படைப்பின் படி, சீன தேசிய திரையரங்கினால் தயாரிக்கப்பட்ட சீன மொழியிலான 'ரிச்சர்ட் III' இவ்வாண்டு ஜுலை திங்களில் இலண்டனில் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம், அதிக பிரிட்டன் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் ராயல் சேக்சுபியர் திரையரங்கின் பொது மேலாளர் கேத்தரின் மல்லியுன், சீனா தயாரித்த இந்த நாடகம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதிநிதிக் குழுவுடன் இணைந்து, கேத்தரின் மல்லியுன் இவ்வாண்டு செப்டம்பர் பிற்பாதியில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது, பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளில் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஒத்துழைப்புச் சாதனைகள் உருவானதை அவர் நேரில்கண்டார். இரு நாடுகளுக்கிடையே உயர்நிலை பயணமானது, இரு தரப்பு புரிந்துணர்வை அதிகரிக்கும் பயனுள்ள வழிமுறையாகும் என்றும், சீன அரசுத் தலைவரின் இப்பயணம், இரு நாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்குச் சிறந்த சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

சீனாவும் பிரிட்டனும், பண்பாட்டுப் பரிமாற்றத்தை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமாக திகழ்கிறது. உரையாடல் மேற்கொண்டு, கதைகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம். இந்த முயற்சிகள், ஒரு தரப்பு மற்ற தரப்பினைப் புரிந்துணர உதவும் என்று கேத்தரின் குறிப்பிட்டார்.

கேத்தரினை போல, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் தலைவரும் பேராசிரியருமான ரானா மிட்டெர், சீன அரசுத் தலைவரின் பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய பார்வையில், நவீன சீனா குறித்த பிரிட்டன் மக்களின் அறிவு, தோற்ற ரீதியான நிலையில் மட்டும் இருக்கிறது. ரானா மிட்டெர் இது பற்றி பேசுகையில்,

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வழியாக, பிரிட்டன் மக்களிடையே சீனாவின் முக்கியத்துவம் எபற்றிய உணர்வு ஏற்படும் என்றும், சீனாவை மேலும் ஆழமாக அறிந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்கும் என்றும் விரும்புகின்றேன். தற்போது, சீனா பற்றி ஒரு முழுமையான கண்ணோட்டம், பிரிட்டன் மக்களுக்கு இல்லை. சீனப் பொருளாதார வளர்ச்சிச் சாதனைகளை மட்டும் அவர்கள் அறிந்துள்ளனர். ஆனால், சீனாவின் பிற துறைகள் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. எனவே, பிரிட்டன் தலைமை அமைச்சரின் சீனப் பயணத்தையோ அல்லது சீன அரசுத் தலைவரின் பிரிட்டன் பயணத்தையோ வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிரிட்டன் மக்கள் சீனாவை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

தற்போது, சீனப் பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய ஆய்வு பிரிட்டனில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் உருவாக்கம், மிக நல்ல முன்மாதிரியாக விளங்குகிறது என்று ரானா மிட்டெர் சுட்டிக்காட்டினார். சீன பண்பாடு மற்றும் வரலாறு மீது பிரிட்டன் மக்களின் ஆவல் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம், பிரிட்டன் இளைஞர்களிடையே தெளிவாக காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040