சீனாவும் பிரிட்டனும், தொழிற்துறைக் கட்டமைப்பில் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகம். இரு நாடுகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்புகளை மேற்கொள்வதிலும், உள்ளார்ந்த ஆற்றல் அதிகம் என்றும் அவர் கூறினார்.
பொருளாதாரம், வர்த்தகம் முதலிய விரிவான துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது, இரு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது. பிரிட்டன் அரசு, சீனாவின் முதலீட்டை வரவேற்கிறது. இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிகத் துறை, இரு நாட்டுறவை முன்னேற்ற மேலதிக பங்கு ஆற்றுவதை ஊக்குவிக்கிறது என்று கேமரூன் தெரிவித்தார்.