• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர்-பிரிட்டன் தலைமையமைச்சர் பேச்சுவார்த்தை
  2015-10-22 11:16:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமருனும் 21ஆம் நாள் லண்டன் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சியில் பெற்றுள்ள சாதனைகள் பற்றி அவர்கள் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டு, இரு தரப்புறவு பற்றி்யும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பொது கருத்துக்களை எட்டியுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் போது ஷீ ச்சின்பிங் பேசுகையில், இவ்வாண்டு சீன-பிரிட்டன் பன்முக தொலைநோக்குக் கூட்டாளியுறவு இரண்டாவது பத்தாண்டுக்காலத்தில் நுழைந்த துவக்க ஆண்டாகும். சீனா பிரிட்டனுடன் இணைந்து, இரு நாட்டுறவின் உள்ளடக்கத்தை செழிப்பாக்கி, இரு தரப்பு ஒத்துழைப்புக்கு வரைபடத்தை வகுத்து, இரு நாட்டுறவை புதிய நிலைக்கு முன்னேற்ற விரும்புகிறது என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஷீ ச்சின்பிங் கூறியதாவது:

"தலைமையமைச்சருடன் பயன்மிக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். பல பிரச்சினைகள் பற்றி முக்கிய கருத்துக்களை எட்டி, 21வது நூற்றாண்டை எதிர்நோக்கும் சீன-பிரிட்டன் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவைக் இணைந்து உருவாக்கி, நீண்டக்காலத்துக்கு தகுந்த வகையில் ஒன்றுக்கொன்று வெற்றி தரும் சீன-பிரிட்டன் உறவின் பொற்காலத்தைத் துவக்கி வைத்து, இரு நாட்டுறவின் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வெண்டும் என நாம் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்றார் அவர்.

சீன அணு ஆற்றல் குழுமமும், பிரெஞ்சு மின்னாற்றல் குழுமமும் பிரிட்டனின் ஹிந்க்ரி முனையிலுள்ள அணு மின் நிலையத்தைக் கட்டியமைப்பது பற்றி நெடுநோக்கு முதலீட்டுத் உடன்படிக்கையில் 21ஆம் நாள் கையொப்பமிட்டன. சீனாவின் அணு மின் தொழில் நுட்பம் மேலை நாட்டில் உட்புகுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இம்மின் நிலையம் இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் இது இயங்கத் துவங்கும். கடந்த 30 ஆண்டுகளில் பிரிட்டன் கட்டியமைக்கும் முதலாவது அணு மின் நிலையம் இதுவாகும். சீனா இத்திட்டப்பணியில் 600 கோடி பவுண்ட முதலீடு செய்து, 33 விழுக்காட்டு பங்குகளை வகிக்கும். இது குறித்து கேமருன் கூறியதாவது:

"இன்று மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளோம். பிரிட்டனில் 60 லட்சம் குடும்பங்களின் எரியாற்றல் பிரச்சினைகளைத் தீர்க்க இத்திட்டப்பணி உதவி செய்து, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கும்" என்றார் அவர்.

பல முக்கிய திட்டப்பணிகள் பற்றி இரு தரப்பும் உடன்பாட்டை எட்டி, பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளன. இரு தரப்புறவின் வளர்ச்சியை இது பெரிதும் முன்னேற்றும். மேலை நாடுகளில் சீனாவின் மிக நல்ல கூட்டாளியாக மாறவும், நாணயம், எரியாற்றல், புத்தாக்கத் தொழில், விசா எளிமையாகுதல் உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை விரிவாக்கவும் பிரிட்டன் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் தாராள வர்த்தக மண்டல உடன்படிக்கையை எட்டுவதை பிரிட்டன் ஆதரித்து, ஐரோப்பிய-சீன உறவின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்குகளை ஆற்ற விரும்புகிறது என்று கேமருன் தெரிவித்தார்.

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் ஆக்கப்பணியில் பிரிட்டன் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம் நடைமுறைக்கு வரும் போக்கில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040