• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீ ச்சின்பிங் பிரிட்டனின் கன்பூஷியஸ் கழகங்களின் நடவடிக்கையில் கலந்து கொண்டார்
  2015-10-23 12:45:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 22ஆம் நாள் லண்டன் நகரில் நடைபெற்ற பிரிட்டனின் கன்பூஷியஸ் கழகங்கள் மற்றும் கன்பூஷியஸ் வகுப்புகளின் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உலகில் ஆயிரமாவது கன்பூஷியஸ் வகுப்பினைத் தொடங்கி வைத்தார். பிரிட்டனில் உள்ள கன்பூஷியஸ் கழகங்கள் பெற்றுள்ள சாதனைகள், சீன-பிரிட்டன் மானுடப் பண்பாட்டுப் பரிமாற்றம் சுறுசுறுப்பாக வளர்ந்து வருவதற்குரிய சிறிய மாதிரியாகும் என்று அவர் தெரிவித்தார். கன்பூஷியஸ் கழகங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சீன-பிரிட்டன் நட்பார்ந்த லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வி கழகத்தின் கன்பூஷியஸ் வகுப்பு மாணவர்கள் பாடிய பாடலாகும். இப்பாடல் துவக்க விழாவுக்கு அன்பு நிறைந்த சூழலைத் தந்துள்ளது.

கன்பூஷியஸ் கழகம், உலகம் சீனாவை அறிந்து கொள்வதற்கான முக்கிய மேடையாகும். கடந்த பல ஆண்டுகளில், கன்பூஷியஸ் கழகங்கள் மற்றும் கன்பூஷியஸ் வகுப்புகளின் ஆசிரியர்கள், சீனப் பண்பாட்டை அறிமுகப்படுத்தி, மக்களுக்கிடையேயான மனங்களை இணைத்து, நட்புப் பாலத்தைக் கட்டியமைப்பதற்கு அதிக முயற்சிகளை மேற்கொண்டு, மகிழ்ச்சி தரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர் என்று ஷீ ச்சின்பிங் உரையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீன, வெளிநாட்டு மொழி மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் ஜன்னல் மற்றும் பாலமாக, கன்பூஷியஸ் கழகம் மற்றும் கன்பூஷியஸ் வகுப்பு அமைந்துள்ளன. பல்வேறு நாட்டு மக்கள் சீன மொழியைக் கற்றுக் கொண்டு, சீனப் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு இவை ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளன. மேலும், சீனாவுக்கும், பல்வேறு நாடுகளுக்குமிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தையும், பலதரப்பட்ட செழிப்பான உலக நாகரீகத்தின் வளர்ச்சியையும் தூண்டுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளன" என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், உள்ளூர் கல்வி வளத்தைச் சார்ந்து, கன்பூஷியஸ் கழகம் பிரிட்டனில் விரைவாக வளர்ந்துள்ளது. இது வரை, பிரிட்டனில் 29 கன்பூஷியஸ் கழகங்களும், 126 கன்பூஷியஸ் வகுப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. இரு நாட்டுப் பண்பாடுகளில் உள்ள தலைசிறந்த அம்சங்கள், இரு நாட்டு மக்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையில் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்துகின்றன. ஷீ ச்சின்பிங் கூறியதாவது:

"கன்பூஷியஸ் கழகம், பண்பாட்டைப் பரவல் செய்து, மனங்களை இணைத்து, உலக நாகரீகத்தின் பலதரபட்ட தன்மையை விரைவுபடுத்துவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார்.

இத்துவக்க விழாவில் கலந்து கொண்ட லேன்காஸ்டர் பல்கலைக்கழகக் கன்பூஷியஸ் கழகத்தின் தலைவர் ச்சாங் ஃபெங் சுன் பேசுகையில், தற்போது மேலதிக பிரிட்டன் மாணவர்கள் சீன மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது.  

"ஒரு புறம், சீனப் பொருளாதாரம் மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளது. மறு புறம், சீனப் பண்பாட்டின் பரவல் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் சீனா மற்றும் சீன மொழி மீது பிரிட்டன் மாணவர்களின் அக்கறை அதிகரித்துள்ளது" என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040