• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா வளர்ச்சி உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2015-10-28 16:14:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா வளர்ச்சி உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சர்வதேச சமூகம், 2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி நிகழ்ச்சிநிரலை புதிய துவக்கமாகக் கொண்டு, நியாயமான, திறப்பான, முழுமையான, புத்தாக்கமான வளர்ச்சிப்பாதையைக் கூட்டாக உருவாக்கி, பல்வேறு நாடுகளிடையேயான கூட்டு வளர்ச்சியை நனவாக்க பாடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நடப்பு உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், முழு உலகத்தின் வளர்ச்சிக்கு புதிய எதிர்காலத்தை வரையறுத்து, சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்பை வழங்கியது. ஒரே இலக்குடனும், பல்வேறு நாடுகள் கூட்டு மற்றும் சொந்த பொறுப்பேற்க வேண்டும். வளரும் நாடுகளின் பரதிநிதித்துவத்தன்மையையும் கருத்து வெளிப்பாட்டு உரிமையைும் உயர்த்தி, பல்வேறு நாடுகள் விதிகளை வகுப்பதில் சமத்துவ முறையில் பங்கெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும். திறப்பான வளர்ச்சியை உறுதிப்படுத்தி, பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைக் கூட்டாக பேணிகாத்து, முழுமையான வளர்ச்சியை நாட முயற்சிப்போம் என்றும் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தும் போது சுட்டிக்காட்டினார்.

சீனா, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மேற்கொண்ட 30 ஆண்டுகளில் சீனத் தனிச்சிறப்பியல்புக்குரிய வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, புத்தாயிரம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்கை அடைந்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழான மக்கள் தொகை 43 கோடியே 90 இலட்சமாகக் குறைந்துள்ளது. கல்வி, சுகாதாரம், மகளிர் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை பெற்றுள்ளது. கடந்த 60க்கும் கூடுதலான ஆண்டுகளில் சீனா, சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, மொத்தமாக 166 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள உதவியை வழங்கியுள்ளது என்று ஷிச்சின்பிங் அறிமுகப்படுத்தினார்.

விரைவில் சீனா, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு உதவி நிதியத்தை உருவாக்கும். முதல் காலக்கட்டத்தில் 200 கோடி அமெரிக்க டாலரை வழங்கி, வளரும் நாடுகள் 2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கும். மிகுதியும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு சீனா தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறது. இந்த உதவித்தொகை, 2030ஆம் ஆண்டுக்குள்ளே 1200 கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும், சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஒரு மண்டலமும் ஒரு பாதையும் என்னும் திட்டப்பணியின் கட்டுமானத்தைத் தொடர்ந்து விரைவுபடுத்தி, ஆசிய அடிப்படை வசதிக்கான முதலீட்டு வங்கியும் பிரிக்ஸ் நாட்டு புதிய வளர்ச்சி வங்கியும் வெகுவிரைவில் இயங்குவதை முன்னேற்றுவித்து, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்கு பங்காற்ற சீனா விரும்புவதாக, ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040