• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மகளிர் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை
  2015-10-28 16:16:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா. நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு, பெய்ஜிங் உலக மகளிர் மாநாடு நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைவு ஆகியவை ஒட்டி, உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டெம்பர் 27ஆம் நாள் நியுயார்க்கில் உரை நிகழ்த்துகையில், பாலின சமத்துவம் மற்றும் மகளிர் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தி, எதிர்காலத் திட்டத்தைக் கூட்டாக வகுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

பண்பாட்டை உருவாக்குபவராகவும், சமூக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய ஆற்றலாகவும் மகளிர் திகழ்கின்றனர். மகளிர் இல்லாவிட்டால் மனிதகுலமும் சமூகமும் இல்லை.

பாலினச் சமத்துவத்தை ஏற்படுத்தும் லட்சியம் மகத்தானது. மகளிர் தொடர்பான லட்சியத்தின் வளர்ச்சி, மனிதகுலப் பண்பாட்டின் முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன், பெய்ஜிங்கில் நடைபெற்ற 4ஆவது உலக மகளிர் மாநாட்டில், பெய்ஜிங் அறிக்கையும் செயல் திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் பாலின சமத்துவம், மகளிர் உரிமை நலன்கள் ஆகியவற்றுக்குத் துணைபுரியும் தொலைநோக்கு இலக்கு மற்றும் ஒட்டுமொத்த கொள்கை உருவாக்கப்பட்டன. இன்றுவரை, பெய்ஜிங் உலக மகளிர் மாநாட்டின் எழுச்சி, உலகளவில் ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், ஐ.நா. மகளிர் அலுவலகம் பெருவாரியான பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.

ஆனால், பல்வேறு இடங்களில் மகளிர் பற்றிய லட்சியம் வேறுபட்ட நிலையில் உள்ளது. பதற்ற நிலைமை, நோய் பரவல், பயங்கரவாதம், வன்முறை செயல் முதலியவை ஏற்பட்ட போது முதலில் மகளிர் தான் பாதிக்கப்படுவர். மேலும், மகளிர் மீதான பாகுபாடு இன்றளவும் நிலவி வருகிறது. எனவே, பாலினச் சமத்துவத்தை நனவாக்கும் வகையில் நாம் தொடர்ந்து பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாலினக் கண்ணோட்டம் பல்வேறு துறைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. பாலினச் சமத்துவம் மற்றும் மகளிரின் பன்முக வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், முதலில் மகளிர் லட்சியத்தை பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன் கூட்டாக முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, மகளிர் உரிமை நலன்களை ஆக்கப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வேண்டும். மூன்றாவதாக, பொறுமையுடன் கூடிய இசைவான சமூகப் பண்பாட்டை உருவாக்க வேண்டும். நான்காவதாக, மகளிர் வளர்ச்சிக்கு சாதகமான சர்வதேச சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

உலக மகளிர் லட்சியம் மற்றும் ஐ.நா. மகளிர் அலுவலகத்தின் பணிக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த அலுவலகத்துக்கு சீனா ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நன்கொடையை வழங்கும். மேலும், சீனா ஐ.நாவுடன் ஒத்துழைத்து உருவாக்கும் நிதியுடன், வளரும் நாடுகளின் மகளிர் இலட்சித்துக்கு உதவியாக அமையும் சிறப்பான திட்டப்பணிகளையும் சீனா மேற்கொள்ளும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040