• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதிக் காப்புப் பணியில் பங்காற்றும் சீனா
  2015-10-28 16:20:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பராக் ஒபாமாவின் முன்னொழிவுக்கு இணங்க நடைபெற்ற அமைதிகாப்பு உச்சி மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் பாராட்டு மற்றும் வரவேற்பைத் தெரிவித்தார்.

அவர் உரைநிகழ்த்தியபோது, அமைதியானது, மனித குலத்தின் பொது விருப்பம் மற்றும் உன்னத இலக்காகும் என்று கூறினார். ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை, அமைதியை ஏற்படுத்தி, நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இது, உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காக்கும் முக்கிய வழிமுறையாக மாறியுள்ளது. மேலும், தொடர்புடைய பிரதேசங்களில் வாழும் மக்களுடைய விருப்பத்தினை நிறைவு செய்துள்ளது என்று ஷிச்சின்பிங் கூறினார்.

தற்போது, உலகில் மோதலில் சிக்கியுள்ள இடங்களில் வாழும் பொது மக்கள், மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைதி, ஐ.நா மற்றும் அமைதிகாப்பு நடவடிக்கை ஆகியவற்றின் மீது அவர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். சீனாவின் நிலைப்பாடுகள் குறித்து, அவர் கூறியதாவது:

1. அடிப்படை அமைதிகாப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

2. அமைதிகாப்பு நடவடிக்கை அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

3. விரைவாக செயல்பட்டு, அமைதிகாப்புச் செயல்திறனை உயர்த்த வேண்டும்.

4. ஆப்பிரிக்காவுக்கு மேலும் அதிகமான உதவிகளை வழங்க வேண்டும்.

இதனிடையில், ஐ.நா பாதுகாப்ப்வை நிரந்தர அங்க நாடுகளில் ஒன்றான சீனா, 25ஆண்டுகளாக அமைதிகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் பங்கெடுக்க படைவீரர்களையும் நிதியையும் வழங்கும் முக்கிய நாடாகவும், சீனா மாறியுள்ளது. இது குறித்து, சீன அரசுத் தலைவர் இவ்வுச்சி மாநாட்டில் கூறுயதாவது,

1, அமைதிகாப்பு செயல்திறன் தொடர்பான ஐ.நாவின் புதிய காத்திருத்தல் அமைப்பு முறையில் சீனா பங்கெடுக்கும். இதனால், அமைதிகாப்புக்கான நிரந்தர காவற்படையை சீனா உருவகாக்குவதோடு, அமைதிகாப்பு கட்டளைக்காக காத்திருக்கும் 8000 பேர் அளவிலான படையை உருவாக்கும்.

2, சீனா ஆக்கப்பூர்வமாக ஐ.நாவின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அமைதிகாப்பு நடவடிக்கைகளில், பொறியியல், போக்குவரத்து மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்களை பங்கெடுக்கச் செய்யலும்.

3, அடுத்த 5 ஆண்டுகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2000 அமைதிகாப்புப்பணியாளர்களுக்குச் சீனா பயிற்சி அளிக்கும். மேலும், மி கண்ணிகளை அகற்றுதல் தொடர்பான 10 உதவி திட்டங்களையும் மேற்கொள்ளும்.

4, எதிர் வரும் 5 ஆண்டுகளில், சீனா ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு 10கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இலவச இராணுவ உதவியை வழங்கும். ஆப்பிரிக்காவில் உள்ள நிரந்தர இராணுவப்படை மற்றும் நெருக்கடியைச் விரைவாக சமாளிக்கும் படைகளுக்கு, இது ஆதரவு அளிக்கும்.

5, ஆப்பிரிக்காவில் ஐ.நா மேற்கொள்ளும் அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஹெலிகாப்டர் படையை அனுப்பும்.

6, சீனா மற்றும் ஐ.நாவின் அமைதி வளர்ச்சி நிதியைச் சேர்ந்த சில குறிப்பிட்ட நிதி, ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார் ஷிச்சின்பிங்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040