• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா. பொது பேரவையின் விவாதக் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2015-10-28 16:21:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், 70ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறக் கூடிய புதிய கூட்டுறவை உருவாக்கி, மனிதகுலத்தின் பொது சமூகத்தை ஒருமனதாகக் கட்டியமைப்பதென்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.

இவ்வாண்டு ஐ.நா. நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவாகும். இது பற்றி ஷிச்சின்பிங் கூறியதாவது—

70 ஆண்டுகளுக்கு முன், எங்கள் முன்னோர் ரத்தம் சிந்தும் போராட்டத்தின் மூலம் பாசிச எதிர்ப்பு போரில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் ஐ.நா. எனும் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் வாய்ந்த இந்தச் சர்வதேச அமைப்பை உருவாக்கினர். அவர்கள் பல்வேறு தரப்புகளின் ஞானத்தை திரட்டி வகுத்த ஐ.நா. சாசனம், நவீன சர்வதேச ஒழுங்கிற்கு அடிப்படையிட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு இந்தச் சாதனை மிகுந்த செல்வாக்கு பெற்று திகழும் என்றார் அவர்.

செப்டம்பர் திங்கள் தொடக்கத்தில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் சீனாவில் சிறப்பாக நடைபெற்றது. கீழை பகுதியிலுள்ள முக்கிய போர்க்களமான சீனா, தியாகம் செய்து, நாடு மற்றும் தேசத்தைக் காப்பாற்றிய அதேவேளை, ஐரோப்பிய மற்றும் பசிபிக் போர்க்களத்திலுள்ள பாசிச எதிர்ப்பு ஆற்றலுக்கும் ஆதரவளித்து, உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றியது.

தற்போது உலக கட்டமைப்பு வேகத்துடன் மாறி வருகிறது. புதிய வாய்ப்புகள் வந்தவுடன், புதிய அச்சுறுத்தல்களும் சவால்களும் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து ஷிச்சின்பிங் கூறியதாவது—

ஐ.நா. சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கையைத் தொடர்ந்து கையேற்றி பரவல் செய்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை மையமாகக் கொண்ட புதிய சர்வதேச உறவை உருவாக்கி, மனிதகுலத்தின் பொது சமூகத்தை கட்டியமைக்க வேண்டும். இதற்கென, சமமான கூட்டுறவை நிறுவ வேண்டும், நியாயமான பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், திறப்பு மற்றும் புத்தாக்கத் தன்மை வாய்ந்த எதிர்காலத்தை தேட வேண்டும். வேறுபட்ட பண்பாடு வளங்களிடையில் இசைவான தொடர்பை முன்னேற்ற வேண்டும், இயற்கைக்கு மதிப்பளிக்கும் பசுமையான உயிரின அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஐ.நாவின் பணிக்கு ஆதரவளித்து, பன்னாட்டு ஒத்துழைப்பைத் தூண்டும் வகையில், 10 ஆண்டுகள் தொடரும் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன-ஐ.நா. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான நிதியை வழங்க சீனா திட்டமிட்டுள்ளது. ஐ.நாவின் புதிய அமைதி காப்பு திறனுக்கான ஆயத்த அமைப்பு முறையில் சீனா சேர்ந்து, அமைதி காப்பு காவற்துறையை முதலில் உருவாக்கும். எதிர்வரும் 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இலவச இராணுவ உதவியை சீனா வழங்கும் என்றும் ஷிச்சின்பிங் அறிவித்தார்.

உலக வளர்ச்சிக்கு எப்போதும் பங்காற்றும் நாடாக திகழும் சீனா, கூட்டு வளர்ச்சி பாதையில் நடைபோட்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் திறப்பு கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040