• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 சீனாவின் 13வது ஐந்தாண்டு திட்டம் பற்றி நிபுணர்களின் எதிர்பார்ப்பு
  2015-10-29 14:17:15  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகின் கவனத்தை ஈர்க்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வுக்கூட்டம் 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. 13ஆவது ஐந்தாண்டு திட்டம் இம்முழு அமர்வில் முக்கியமாக பலிசீலனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலான சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, பொது மக்கள் சீர்திருத்தப் பயன் கிடைக்கச் செய்வது, இத்திட்டத்தின் மைய இலக்காகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதுமைக்கால காப்புறுதி, கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை, பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்துள்ளன. பொது மக்கள் கவனம் செலுத்தும் மேற்கூறிய பிரச்சினைகளை 13வது ஐந்தாண்டு திட்டம் முழுமூச்சுடன் தீர்த்து, பொது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்தும் என்று சீன சர்வதேச பொருளாதாரப் பரிமாற்ற மையத்தின் ஆலோசனை ஆய்வுப் பிரிவின் துணை தலைவர் வாங் ஜுன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பொது மக்களின் வாழ்க்கையின் வளர்ச்சியை உறுதி செய்து, மேம்படுத்துவது என்பது தான், சீனாவின் பல்வேறு பணிகளின் துவக்கப் புள்ளி மற்றும் இறுதிப் புள்ளியாக இருக்கும். இதில் நாங்கள் பெரும் கவனம் செலுத்துகிறோம்" என்றார் அவர்.

சீன செய்தி ஊடகங்களின் மதிப்பீட்டின்படி, பொது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவதும், வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதும், 13வது ஐந்தாண்டு திட்டத்தில் வகுக்கப்படும் பத்து இலக்குகளில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் காலத்தில், பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு தொடர்பான துறைகளில் அமைப்பு முறையில் மாற்றம் ஏற்படும். மேலதிக பொது மூலவளம், கீழ் நிலை மக்கள், கிராமவாசிகள் மற்றும் நலிந்த மக்கள் ஆகியோருக்கு வழங்கப்படும். நகரங்கள் மற்றும் கிராமங்களிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் நிலவும் இடைவெளி குறையும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவேயுள்ள வரையறையின்படி, சுமார் 7 கோடி வறிய மக்கள் வறுமையிலிருந்து விடுபட முயற்சிகளை மேற்கொள்வது, நடுத்தரமான வசதியான சமூகத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானது என்று சீனத் தேசிய நிர்வாகக் கழகத்தின் பேராசிரியர் ச்சு லீ ஜியா கருத்து தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டுக்குள் நன்கு வளர்ச்சி அடைந்த சமூகத்தை அனைத்து நிலைகளாலும் உருவாக்கிய பிறகு, பொது மக்கள் மென்மேலும் செல்வமடையவர். வளர்ச்சி, இதற்குத் திறவுக்கோலாகும். அடுத்தத ஐந்தாண்டுகளில், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து நடுத்தர அல்லது உயர் வேகத்தில் சீராக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் பகுத்தாராய்ந்து கருத்து தெரிவித்தனர். சீரான பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றினால்தான், பல்வேறு துறைகளிலான சீர்திருத்தத்தை செவ்வனே தூண்ட முடியும் என்று சீன சர்வதேச பொருளாதாரப் பரிமாற்ற மையத்தின் துணை தலைமை இயக்குநர் வெய் ஜியன் கோ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040