• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் மக்கள் தொகையின் வளர்ச்சி நெடுநோக்கு
  2015-10-30 11:18:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு அக்டோபர் திங்கள் 29ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. மக்கள் தொகையின் சமமான வளர்ச்சியை விரைவுப்படுத்தி, சீனத் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்பநலம் எனும் தேசிய அடிப்படை கொள்கையில் ஊன்றி நிற்க வேண்டும். வளர்ச்சியின் தொலைநோக்குத் திட்டத்தை மேம்படுத்தி, ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்சினையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் வெளியான பொது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வையடுத்து, சீன மக்கள் தொகை மற்றும் பிறப்புக் கொள்கைக்கான வரலாற்று தன்மை வாய்ந்த திருத்தம் இதுவாகும்.
மக்கள் வளர்ச்சிக்கான கொள்கை, சீனாவில் மக்கள் அனைவருக்குமுடனான தொடர்பாகும். இச்செய்தி வெளியிடப்பட்ட பின், மக்கள் இதில் பெரும் கவனம் செலுத்தினர்.
புதிய நூற்றாண்டில், சீன மக்கள் தொகையின் வளர்ச்சியில், முக்கிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. தற்போது, சீன மக்கள் தொகை 130 கோடியைத் தாண்டியுள்ளது. அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாட்டின் அடிப்படை நிலைமை பரவலாகி மாறவில்லை என்ற போதிலும், குறைவான பிறப்பு விகிதம், முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்சினை, நகரமயமாக்க விகிதத்தின் உயர்வு, தனி குழந்தை குடும்பத்தின் அதிகரிப்பு முதலிய பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளன. தொடர்புடைய தரவுகளின்படி, 12வது ஐந்தாண்டுத் திட்டக்காலம் முதல், சீனாவில் முதியோர்களின் விகிதம் உயர்ந்து வருகிறது. 2014ஆம் ஆண்டில், 15 வயது முதல் 59 வயது வரையான உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, எண்ணிக்கை 93 கோடியாகக் குறைந்துள்ளது. தற்போது, உலகளவில் மக்கள் தொகையில் முதியோர்கள் வேகமாக அதிகரிக்கும் நாடாக சீனா மாறியுள்ளது. ஐ.நாவின் தரவுகளின்படி, இந்நூற்றாண்டின் மத்தியகாலத்தில், சீனாவில் 60 வயதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவைத் தாண்டி, 50 கோடியை எட்டும். தவிரவும், முதலியோருக்கான மருத்துவச் சிகிச்சை, சமூகக் காப்புறுதி போன்ற பிரச்சினைகள் அதிகரிப்பதும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
தற்போதைய மக்கள் தொகை கொள்கையின் திருத்தம், தொடர்புடைய கொள்கையின் தொடர்ச்சித் தன்மையை நிலைநிறுத்தலாம். அதே வேளையில், இது, மக்கள் தொகையின் வளர்ச்சி போக்கை சீராக வெளிப்படுத்தலாம் என்று சீன ரென்மின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக மற்றும் மக்கள் தொகை கல்லூரியின் முதல்வர் ச்சியை சான் வூ தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040