• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பன்னாட்டு சீன குறும்பட விழா 2015
  2015-10-31 18:30:33  cri எழுத்தின் அளவு:  A A A   

பன்னாட்டு சீன குறும்பட விழா 2015 எனும் நிகழ்வு சீனாவின் உள் மங்கொலியாவின் சிபங் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அந்நகரைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கு கொண்டு விழாவை குறித்தும் சிபங் நகரின் சிறப்புகள் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிக் கூறினர். இதில் சீன வானொலியின் துணை ஒலித் தொகுப்பாளர் திரு.ரென் கியூன் கலந்து கொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த குறும்பட விழாவிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான குறும்படங்கள் போட்டியிட்டன.இவற்றில் நூறு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, பிறகு அவற்றிலிருந்து பரிசுக்குரிய மிகச் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்ப்பட்டதாக கூறினார். மேலும் இந்த குறும்பட விழா 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் போட்டியிடும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான வளர்ச்சி என்று குறிப்பிட்டார். மேலும் இவ்விழாவிற்கு முன்பு பல தேர்ந்த கலைஞர்களைக் கண்டறிவது கடினம், ஆனால் தற்போது நல்ல பல கலைஞர்களையும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும் காண முடிகிறது ஆதலால் வெகு சிறந்த திரைப்படங்கள் நமக்கு கிடைக்கிறது, எனவே இத்தகு முயற்சிகளை செய்தி ஊடகங்கள் வளர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீன மத்திய தொலைக்காட்சி இணையதள இயக்குநர் வெங் வென் பின், இந்த குறும்பட விழா பல்வேறு நல்ல முயற்சிகளை முன்னேடுத்துச் செல்கிறது குறிப்பாக புதுமை மற்றும் ஆற்றலை வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார். மேலும் ஊடக ஆற்றல் இத்தகு விழாக்களை வளர்க்க வேண்டும். இந்த குறும்பட கலை ஆனது நிலையான உறுதிமிக்க தனிச்சிறப்புகளை பொருத்தி வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தான் சீனாவின் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு வெளிப்படும், இவர்களது இந்த குறும்படத்தின் மூலம் நல்ல உறவுகளை சர்வதேச சமூகத்துடன் இணைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 

சிபங் நகர துணைத்தலைவி லியாங் சூ குயிங் அம்மையார் பேசும் போது குறும்படங்கள் புதிய வழிமுறைகளை மட்டும் அன்றி பல்வேறு பண்பாடுகளையும் பரவுவதற்கு வகை செய்கின்றது, இதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தலாம். மேலும் இந்த விழா இந்நகரில் நடத்தப்படுவதன் மூலம் இந்நகரத்தின் பண்பாடு வெளிப்படும். இவை பார்ப்பதற்கு குறும்படங்களாக தோன்றலாம் ஆனால் இவை நம் மனதில் பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது, இது போன்ற குறும்பட விழாவினை எதிர்காலத்திலும் இந்நகரில் தொடர்ந்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்த நகரின் சுற்றுலா பண்பாடு வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என்று லியாங் சூ குயிங் அம்மையார் குறிப்பிட்டார்.

குறும்படங்கள் காலத்தை பேசி நம் கவனத்தை ஈர்க்கும் என்றால் மிகையல்ல என்ற எண்ணத்தோடு இந்த செய்தியாளர் சந்திப்பிலிருந்து நாம் விடைபெற்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040