• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங்கின் கருத்து
  2015-11-04 09:42:11  cri எழுத்தின் அளவு:  A A A   
தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஆலோசனை குறித்த பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் விரிவுரை 3ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு மடங்காக அதிகரிக்கும் இலக்கை நனவாக்கும் வகையில், 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சீனப் பொருளாதாரத்தின் ஆண்டு அதிகரிப்பு  சராசரி 6.5 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் 5 ஆண்டுகாலத்தில் சீனாவின் வளர்ச்சி, வேகத்துக்கும், அதிகரிப்புக்கும், குறிப்பாக தரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தரமிக்க, பயனுள்ள மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முயற்சியுடன் நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040