• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம் 2
  2015-11-18 14:12:45  cri எழுத்தின் அளவு:  A A A   

8ஆவது இலக்க பாலம் எனும் இடம், ஷாங்காய் வாகன தடுப்புக் கருவி தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. 1950 முதல் 1980ஆம் ஆண்டுகாலம் வரை கட்டப்பட்ட 8 ஆலைகள் இவ்விடத்தில் அமைந்துள்ளன. அவற்றின் கட்டிடப் பரப்பளவு பத்தாயிரம் சதுர மீட்டருக்கு மேலாகும். தற்போதைய 8ஆவது இலக்க பாலம் எனும் இடத்தில், பழைய தொழிற்சாலைகள் ஏற்படுத்திய மனச்சோர்வு நீக்கப்பட்டு விட்டு, பாலம் கட்டிடங்களுடன் இணைந்து ஏற்படுத்திய புத்தாக்கம், இணக்கம், நவ நாகரிகம் ஆகியவை காணப்படலாம். இதனால் கண்டுபிடிப்புத் துறையில் திறமைமிக்கவர்கள் இங்கே ஈர்க்கப்படுகின்றனர். வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு துறை சார் பல்வகை தொழில் நிறுவனங்களும் இவ்விடத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. நாட்டின் தொழிற்துறை சுற்றுலாவுக்கான மாதிரிகளில் 8ஆவது இலக்க பாலம், புத்துணர்வு வாய்ந்த கண்டுபிடிப்பு துறையை தனிச்சிறப்பாக கொண்டிருக்கும் முதலாவது மாதிரியாகும். ஷாங்காய் மாநகரச் சுற்றுலா சந்தைக்கு அது புதிய காட்சித்தலமாக அமைகிறது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040