• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் பற்றி சீனாவின் கருத்து
  2015-11-11 18:24:50  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 10ஆம் நாள் பேசுகையில், பிலிப்பைன்ஸ் ஏபெக் தலைவர்கள் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் தென் சீன கடல் பிரச்சினை இடம்பெறாத போதிலும், கூட்டத்தின் போது விவாதிக்கப்படக் கூடும் என்று கூறினார்.

இது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங்லெய் 11ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கருத்தைத் தெரிவித்தார். ஏபெக், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் மிக முக்கியமான பொருளாதார ஒத்துழைப்பு மன்றமாகும். தென் சீன கடல் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கான இடம் இது அல்ல. உணர்வலையான பிரச்சினையை வேண்டுமென்றே பரப்புரை செய்வதற்கு வசதி தர வேண்டாம் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040