• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹானி இனத்தின் பாரம்பரிய நாட்காட்டி
  2015-11-12 16:45:47  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹானி இனத்தின் மக்களில் பெரும்பாலானோர், யுன்னான் மாநிலத்தின் தென் பகுதியில் அடர்த்தியாக வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பிரதேசம், ஹோங்ஹெ ஆறு, லான்சாங்ஜியாங் ஆறு, ஐலாவ்ஷான் மலை, வூலியன்ஷான் மலை ஆகியவற்றால் சூழ்ந்து காணப்படுகின்றது.

ஹானி இனத்திற்குள் பல கிளைகள் உள்ளன. எனவே, இந்த இனத்திற்கு வேறுபட்ட பெயர்கள் சூடப்பட்டுள்ளன. இவற்றில், ஹானி, காத்தோ, யானி, ஹாவ்னி, பீயுயெ, பெய்ஹோங் ஆகிய பெயர்களைக் கூறும் மக்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, ஆ மூ, தோனி, காப்பியே, ஹாய்னி உள்ளிட்ட பெயர்களும் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் வெவ்வெறு பெயர்கள் பயன்படுத்தப்படும் போதிலும், இந்த பெயர்களுக்கு ஒத்த உள் அர்த்தம் இருக்கிறது. அதாவது, இப்பெயர்களுக்கு 'ஹெ ரென்' என்று அர்த்தம். 1949ஆம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, இந்த தேசிய இனத்தவர்களில் அதிகமானோரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, இந்த இனத்திற்கு'ஹானி'என்ற பொது பெயர் சூடப்பட்டது.

ஹெனி இனம் தங்களது மொழியையே பேசி வருகின்றனர். ஹெனி மொழிக்கு மூன்று பேச்சு வழக்குகள் நிலவுகின்றன. 1949ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. 1957ஆம் ஆண்டுப் பிறகு, லத்தீன் எழுத்துகளை அடிப்படையாக கொண்டு, ஹானி இனம் ஒரு எழுத்துமுறையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, ஹானி இனத்தின் நாள்காட்டி பற்றிய பல சுவையான தகவல்களைத் தொகுத்து உங்களகோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நாள்காட்டி துறையிலேயே, ஹானி இனம், மனித குலத்தின் வரலாற்றில் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. இந்த இனத்தின் நாள்காட்டியின்படி, ஓராண்டு மூன்று காலாண்டுகளாகப் பிரிக்கப்படும். குளிர்காலம், மழை காலம், கோடைக்காலம் ஆகிய மூன்று பருவகாலங்கள் உண்டு. ஒவ்வொரு பருவகாலத்திலும் நான்கு மாதங்கள் இடம்பெறும். இந்த நாள்காட்டியே, ஹானி மக்கள் வசிக்கும் 'ஐலாவ்ஷான்' மண்டலத்தில் இயற்கைச் சுற்றுச்சூழலின் மாற்றங்களுக்குப் பொருத்தமாக உள்ளது. பருவகாலம் என்ற நாள்காட்டி முறையைத் தவிர, ஹானி மக்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அடிப்படையிலான நாள்காட்டியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நாள்காட்டி, தாவரங்களின் வளர்ச்சி மாற்றம், பறவைகளின் இடப்பெயர்ச்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாகா கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாள்காட்டி மூலம், ஹானி மக்கள், வேளாண்மை உற்பத்தி செய்து வருகின்றனர். உயிரோட்டமான தெளிவான இந்த நாள்காட்டியை, ஷானி மக்கள் தற்போதும் தொடர்ந்து பயன்படுத்தி வருவது பாராட்டத் தக்கது.

உயிரிகள் நாள்காட்டியின் அடிப்படையில், ஹானி இனம், வேளாண் உற்பத்தி நிகழ்வுகள் தொடர்பான நாள்காட்டியை உருவாக்கியது. அதன்படி, ஓராண்டு 12 மாதங்கள் உண்டு. சந்திரன் மாறும் விதிமுறையின்படி, ஒவ்வொரு மாதத்திலும் 30 தினங்கள் உண்டு. 12 மாத நாள்காட்டியை தவிர, 13 மாதங்கள் அல்லது 10மாதங்கள் அடங்கும் நாள்காட்டியை ஹானி மக்கள் பயன்படுத்தினர். 13 மாத நாள்காட்டியில், இரண்டு மாதங்களில் முறையே 15 நாட்கள் மட்டும் உண்டு. 10 மாத நாள்காட்டியில், ஒவ்வொரு மாதத்திலும் 36 நாட்கள் உண்டு. தற்போது, உலக நாடுகளில் பரவாலக பயன்படுத்தப்படும் நாள்காட்டியில் 365 நாட்கள் அடங்கும். ஆனால், ஹானி இனத்தின் நாள்காட்டியின் 360 நாட்கள் மட்டும் உள்ளன. இவற்றில், சில வேறுபாடுகள் நிலவுகின்றன.

ஹானி இனம் பல பாரம்பரிய விழாகளைக் கொண்டது. இவற்றில், 10-வது மற்றும் 6-வது திங்கள் மிக முக்கியானது. ஹானி இனத்தின் பழக்க வழக்கங்களில், 10-வது திங்களில் புத்தாண்டு தொடங்கும். 6-வது திங்களில் பாரம்பரிய வேளாண்மை உற்பத்தி தொடர்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040