சென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் மூன்று சக்கர வாகனமான ஆட்டோ ரிக்ஷாவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு வருமானத்தை ஈட்டித் தரும் வாகனத்திலேயே சாதனை புரிந்துள்ளது அவருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் புரிந்த சாதனை என்னவென்றால்,மூன்று சக்கர வாகனத்தில், இரு சக்கரத்தில் மட்டும் சவாரி செய்த்துதான். இதுபோன்று 1.37 மைல் தொலைவு 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் சென்றுள்ளார். இது, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் முன் அரங்கேறியது.
இதுபோன்ற சாவரி செய்து சாதனை படைக்கப்பட்டிருந்த முந்தைய சாதனையை ஜெகதீஷின் புதிய சாதனை முறியடித்து 2016ஆம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தும் விட்டது.
இது குறித்து ஜெகதீஷ் கூறுகையில், இதுபோன்று ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டி, முந்தைய சாதனை முறியடிக்க முடியும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது அது நிகழ்ந்துள்ளது திருப்தியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.