• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் தலைவர்களது 10ஆவது உச்சி மாநாடு
  2015-11-16 10:45:13  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் உச்சிமாநாடானது பொருளாதார மேலாண்மை பற்றி உலகளவில் முக்கிய நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கும் மேடையாகும். பாரிஸ் நகரம் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளானப் பின்னணியில், இவ்வாண்டு துருக்கியின் ஆந்தாலியாவில் நடைபெற்று வரும் இவ்வுச்சிமாநாட்டில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. உள்நாட்டின் பாதுகாப்பு நிலைமையைச் சமாளிக்கும் வகையில், பிரான்ஸ் அரசுத் தலைவர் ஓலாந்தோ இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின் உபசரிப்பு நாடான துருக்கியின் அரசுத் தலைவர் எல்தோஆன் அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவைச் சந்தித்த போது கூறியதாவது,

உலகப் பல்வேறு இடங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சுறுத்தலை நாம் எதிர்நோக்குகின்றோம். சிரியாவிலுள்ள ஐ.எஸ் எனும் தீவிர அமைப்பைக் கூட்டாக ஒடுக்குவது பற்றியும், தீவிர அமைப்பின் சர்வதேச கூட்டணி ஆற்றலைத் தாக்குவது பற்றியும் திரு. ஒபாமாவுடன் விவாதிக்கின்றோம். நெடுநோக்கு கூட்டாளி நாடுகளான நம் இரு நாடுகள் உலக அமைதிக்குப் பங்காற்ற விரும்புகின்றோம் என்றார் அவர்.

 ஒபாமா கூறியதாவது

 நீண்டகாலமாக, பொருளாதாரத் துறை தான் 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் மாநாட்டின் சூழ்நிலையை மாற்றியுள்ளன. அண்மையில் அங்காலாவில் இதைப் போன்ற பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது. தவறான சிந்தனையும் அப்பாவி மக்களைக் கொலை செய்யும் இத்தகைய வன்முறை செயல்கள் பிரான்ஸ் அல்லது துருக்கிக்கு மட்டும் எதிரானதல்ல. மாறாக அவை முழு நாகரிக சமூகத்துக்கும் எதிரானது என்றார் அவர்.

 20 நாடுகள் குழு சிறப்பாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் துஸ்க் கருத்து தெரிவித்தார். சில நாடுகளின் நாணயச் சங்கிலியிலிருந்து வந்த நிதி ஆதரவைப் பெற முடியாத நிலையை உறுவாக்கினால், இணையம் மூலப் பயங்கரவாதக் குற்றங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுவதைத் த்தடுக்க முடியும். இயன்றளவில் ஒத்துழைத்து சந்தேகிக்கப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம், நாம் இத்தகைய அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு, அகதிகள், பாதுகாப்பு முதலிய பிரச்சினைகளுடன், பொருளாதார பிரச்சினையும், காலநிலை மாற்றப் பிரச்சினையும் நடப்பு உச்சிமாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன. தவிர, இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரிக்ஸ் நாடுகள் தலைவர்கள் 15ஆம் நாள் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நடத்தினர். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு, உலகளாவிய அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளித்தல் முதலியவை பற்றி 5 நாடுகளின் தலைவர்கள் ஆழமாகக் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040