• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார நிலைமை பற்றி ஷிச்சின்பிங் கருத்து
  2015-11-18 19:37:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் மணிலாவில் ஏபெக் அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். உலகப் பொருளாதாரம் மந்தமாக வளரும் நிலையில், பல்வகை இன்னல்களையும் சவால்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டு வரும் சீனாவின் பொருளாதாரம் நியாயமான வரம்புக்குள் சீராகவும் ஓரளவு வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராக வளரும் அடிப்படை, பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நிபந்தனை, பொருளாதாரக் கட்டமைப்பு சீராக்கப்படும் முன்னேற்றப் போக்கு ஆகிய 4 துறைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040