• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் மாநாட்டில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள்
  2015-11-19 12:53:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏபெக் என சுருக்கமாக அழைக்கப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறையின் மாநாடு 18ஆம் நாள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை ஆற்றியபோது, தற்போதைய உலகப் பொருளாதார வளர்ச்சி நிலைமை குறித்து சீனாவின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் விளக்கினார். மேலும், உலகப் பொருளாதார அதிகரிப்பை தூண்டும் வகையிலும், பிரதேச பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும், சீனாவின் கருத்துக்களையும் அவர் தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் தனது உரையில், ஆசிய-பசிபிக் பிரசேத்திலுள்ள நாடுகள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை முன்னேற்றி, திறப்புத்தன்மையான பொருளாதார முறையை அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆஸ்திரேலியாவின் ஓஷியன்கோல்ட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மிக் வீல்கேஸ் பேசுகையில், ஷிச்சின்பிங்கின் உரையில், திறப்புத்தன்மையான பொருளாதாரம், தொடரவல்ல வளர்ச்சி தொடர்பான கருத்துக்கள், உலகிற்கு ஆக்கமுள்ள அறிகுறியை காட்டுவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியாவது

அவரது உரையில் உலக சுற்றுச்சூழல் நிர்வாகத்தை முன்னேற்றுவதை முக்கியமாக கொள்வது, தொடரவல்ல வளர்ச்சிக்காக வாக்குறுதி அளிப்பது ஆகியவை எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளன என்று தெரிவித்தார்.

சீனப் பொருளாதார வளர்ச்சி மீது வெளிநாடுகள் கொண்டுள்ள கவலை குறித்து, ஷிச்சின்பிங் தனது உரையில் பதில் அளித்ததோடு, சீனாவின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சீனாவின் வளர்ச்சிக் கண்ணோட்டங்களையும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தியுள்ளார் இது பற்றி மிக் வீல்கேஸ் குறிப்பிட்டபோது, தொடரவல்ல வளர்ச்சி மிகவும் முக்கியமானது. நிலைத்தன்மையுடனான பொருளாதார அதிகரிப்பு வேகத்தை தொடர்ந்து நீட்டிக்கச் செய்வது சீனாவுக்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

பட்டுப் பாதை நிதியம், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உள்ளிட்ட பன்னாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும், ஷி ச்சின்பிங் கூறினார். 50க்கும் அதிகமான நாடுகளுடன் இணைந்து சீனா உருவாக்கும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, இவ்வாண்டுக்குள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும். இவ்வங்கி செயல்படத் தொடங்கிய பிறகு ஒரு தொகுதி முக்கிய செயல்திட்டங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இவ்வங்கிக் கட்டுமானம் பற்றி, பிலிப்பைன்ஸின் நிதித் துறை ஆலோசனை நிறுவனத்தின் கூட்டாளி ஸ்டிபின் சியே பேசியபோது

ஷி ச்சின்பிங்கின் உரையில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி பற்றிய விளக்கம் ஊக்கமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய பிரசேத்திலுள்ள நாடுகள், அடிப்படை வசதிக் கட்டுமானத் துறையில் பெரும் தேவையை எதிர்கொள்கின்றன. ஆனால், இதற்கான நிதி திரட்டும் அளவு குறைவாக உள்ளது. எனவே, இவ்வங்கியின் செயல்பாடு, எமக்கு உதவி அளிக்கும். அது, எமக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

பிரதேச வளர்ச்சியில் திறப்புத்தன்மையான கருத்துக்களை சீனா பின்பற்றும் என்றும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் மூலமாக, திறப்பு, கூட்டு வளர்ச்சி, சமநிலை உள்ளடங்கும் பிரதேச ஒத்துழைப்பு முறையைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040