• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜார்க்கண்ட் மாநிலத் தலைமைச் செயலருடன் சீனத் துணை நிலைத் தூதர் சந்திப்பு
  2015-11-23 11:35:13  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் கல்கத்தாவிலுள்ள சீனத் துணை நிலைத் தூதர் மாஸென்வு 22ஆம் நாள் ஜார்க்கண்ட் மாநிலத் தலைமைச் செயலாளர் ராஜிவ் கௌபாவைச் சந்தித்துரையாடினார்.

சீன-இந்திய உறவின் வேகமான வளர்ச்சி பற்றியும், சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் பற்றியும் மாஸென்வு அறிமுகப்படுத்தினார். பல்வேறு துறைகளில் ஜார்க்கண்ட் மாநிலத்துடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைச் சீனா வலுப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மாஸென்வு உள்ளிட்டவரின் வருகையை ராஜிவ் கௌபா வரவேற்றார். கனிம அகழ்வு, இரும்புருக்கு, வாகனம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜார்க்கண்ட் மாநிலம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040