• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்கப்பூரில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி உரை
  2015-11-24 11:23:55  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் இந்தியாவின் சிங்கப்பூர் கதை (India's Singapore story) எனும் தலைப்பில் திங்கள்கிழமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தலைமை அமைச்சர் லீ சியன் லூங், துணைத் தலைமை அமைச்சர் தர்மன் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோடி ஆற்றிய உரையில்,

சிங்கப்பூரைப் போல இந்தியாவும் கல்வி, பொதுச்சேவை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து வருகிறது. கடல், ஆகாயம், மற்றும் இணையம் ஆகியவற்றின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வகையில் ஆசிய பிரதேசத்தில் உள்ள நாடுகள், அதனைத் தாண்டி அமைந்துள்ள அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பிற நாடுகள் மற்றும் எங்களுடைய கிழக்காசிய மாநாட்டின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியா இணைந்து பணியாற்றும். ஆசிய பிரதேச வளர்ச்சிக்கு ஆசியான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரதேச அளவில் பல விஷயங்களை உள்ளடக்கிய பொருளாதார ஒத்துழைப்பு விரைவில் ஏற்படுவதற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே தூதரக உறவு நிறுவப்பட்டு 50 ஆண்டுகளாகியுள்ள நிலையில் மோடியின் இப்பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040