• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எழுத்துக்களை படிக்கும் 19 மாதக் குழந்தை
  2015-11-26 16:50:15  cri எழுத்தின் அளவு:  A A A   

குறைந்தது 3 ஆண்டுகளுக்குப் பின்தான் ஒரு குழுந்தை, எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்கும். ஆனால், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் 19 மாதக் குழந்தை சுமார் 300-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை பிழையில்லாமல் படிப்பது "என்னே குழந்தையின் ஆற்றல்" என பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதவிர, சுமார் 50 வரையிலான எண்களை தவறில்லாமல் எண்ணுவதிலும் இக்குழந்தை கில்லாடியாம்.

அக்குழந்தையின் பெயர் கார்டர். ஆங்கிலத்தில் உள்ள was, like, to, made, over, may, call என 300-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை உச்சரிக்கும் கார்டரின் ஒலி-ஒளிக்காட்சியை அதன் தாய் லடாயோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து லடாயோ கூறும்போது, கார்டருக்கு ஏ, பி, சி தெரியும், அதனால், எழுத்துக்களை எழுதும்போது அதனை எழுத்துக்கூட்டி படிக்கிறான். மேலும், ஏதேனும் வெளி இடங்களுக்குச் சென்றால் அங்கே வைக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் முயற்சி செய்தி படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். அவனுக்கு 7 மாதமாக இருந்தபோது எழுத்துக்களை நினைவில் வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான். சுமார் 12 மாதமாக இருக்கும்போது ஆங்கில சொற்களை வாய்விட்டு சொல்லவும் ஆரம்பித்து விட்டான் என்று கூறுகிறார்.

பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது என்னவென்றால், குழந்தைக்கு 18 மாதமாக இருக்கும்போது அக்குழந்தை அதிகபட்சமாக 6 வார்த்தைகளை மட்டுமே கூற கற்றுக் கொண்டிருக்கும் என்பதுதான். ஆனால், கார்டரின் விஷயமோ தலைகீழ். எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகவோ அல்லது ஏதேனும் ஒரு துறையில் ஜொலிக்கும் நபராகவோ கார்டர் உருவெடுப்பார் என்றே தோன்றுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040