2ஆவது உலக இணைய மாநாடு வரும் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை சீனாவின் சேச்சியாங் மாநிலத்தின் யீவூ நகரில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டின் முதல் 10 திங்களில் சீனாவில் செல்லிடப்பேசியில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியை எட்டி உலகில் முதலிடம் வகிக்கின்றது என்று சீன தொழில் மற்றும் தகவல் துறையின் துணை அமைச்சர் ஃபங் ஃபே 14ஆம் நாள் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு வரை, சீனாவில் பெறும் தரவுகளின் மொத்த எண்ணிக்கை உலகில் இருப்பதன் 20 விழுக்காடு இருக்கும் என்றும், பெரிய தரவுகள் தொழிற்துறையிலான பயன்பாட்டை சீனா விரைவுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். பெரிய தரவுகள் துறையில் மேல்நிலை வடிவமைப்பு, வரையறை, முக்கிய தொழில் நுட்ப ஆராய்ச்சி, பயன்பாடு, பாதுகாப்பு முதலிய பகுதிகளில் தெளிவான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. மேலும் தொழில் மற்றும் தகவல் துறையின் துணை அமைச்சர் ஃபங் ஃபே கூறியதாவது
சீனாவில் பெரிய தரவுகள் துறையின் வளர்ச்சியில், சந்தை அளவின் மேம்பாடு தெளிவானது. இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவில் செல்லிடபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 130 கோடியாகும். செல்லிடப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியாகும் என்று அவர் கூறினார். பெரிய தரவுகள் துறையின் வளர்ச்சி மற்றும் பெரும் சந்தை அளவுடன், அதிக தலைசிறந்த இணைய கூட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. தற்போது, சீனாவின் இணைய கூட்டு நிறுவனங்கள் உலகில் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகளவில் 10 பெரிய இணைய கூட்டு நிறுவனங்களில் 4 சீனாவின் கூட்டு நிறுவனங்களாகும். முதல் 30 பெரிய கூட்டு நிறுவனங்களில் சீனக் கூட்டு நிறுவனங்கள் 40 விழுக்காட்டுக்கு மேல் பங்கு வகித்துள்ளன. ஐடி உற்பத்தி பொருட்களின் தயாரிப்பில் சீனா ஒரு பெரிய நாடாகும். சீனா தயாரித்த ஸ்மாட் செல்லிடபேசிகள், கணினிகள், பலகை கணினிகள் முதலியவை உலக சந்தையில் போட்டியாற்றல் மிக்க உற்பத்தி பொருட்களாகும். பெரிய தரவுகளுடன் அவை தொழில் போட்டியாற்றல் மேம்பாட்டுடையவை என்று ஃபங் ஃபே கூறினார். ஃபங் ஃபே மேலும் கூறியதாவது
தொழிற்துறையில் பெரிய தரவுகளின் பயன்பாட்டை விரைவுப்படுத்தும் வகையில் அடுத்த கட்டத்தில் பெரிய தரவுகள் துறையின் முக்கிய தொழில் நுட்ப ஆய்வு மற்றும் தொழில் மயமாக்கப் பணியை சீனா முக்கியமாக முன்னேற்றும்.