தலைப்பைக் கேட்டவுடன் ஏதோ தவறான தொலைபேசி அழைப்பு கேட்கப்பட்ட வரிகள் என்று தோன்றுகிறதா. ஆம். தவறான அழைப்புதான், ஆனால், அழைக்கப்பட்டப்பது பூமியிலிருந்து அல்ல,. விண்வெளி நிலையத்தில் இருந்து.
பிரிட்டனைச் சேர்ந்த டிம் பீக், விண்வெளி நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் விண்வெளி நிலையத்தில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. அதனால், அவரது பணிகளையும், சமூக ஊடகத்தில் அவர் பதிவேற்றும் கருத்துக்களை லட்சக்கணக்கான பிரிட்டன் வாசிகள் வாசித்தும், தொடர்ந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே, நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை சமூக ஊடக வாயிலாக தெரிவித்ததுடன், மற்றொரு ருசிகர தகவலையும் பதிவு செய்திருந்தார்.
அது, அந்த பெண்மனியிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகின்றேன். தவறுதலாக அழைக்கப்பட்ட தொலைபேசி அழைப்பில், ஹலோ இது பூமியா என்று நான் வினவினேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த அழைப்பு யாருக்குச் சென்றது என்ற விவரம் தெரியவில்லை. ஏதாயினும் விண்வெளியில் இருந்து கிடைக்கப் பெற்ற அழைப்பு என்பதால், அந்தப் பெண்மனி அதிர்ஷடக்காரர்தான்.