ஒருநாள் முதல்வரைப் போல, ஒருநாள் காவல்துறைத் தலைவராக 7 வயது சிறுவன் பதவி வகித்த சம்பவம் அமெரிக்காவின் டெட்ரோய்ட் நகரில் நிகழ்ந்துள்ளது.
டெட்ரோய்ட் நகர காவல்துறைத் தலைவராக ஒருநாள் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் காவல்துறைத் தலைமையகத்துச் சென்று சோதனை நடத்தி, மோப்ப நாய்களுடன் பழகி என தனது ஒருநாள் பணியை சிறப்பாக முடித்துள்ளார் கார்டர் வித்மர் எனும் சிறுவன். சிறுவனின் தந்தையும் லெப்டினென்ட் அதிகாரி தான். விளையாட்டுக்காக, தனது தந்தையையே கைது செய்வது போன்று கூட அச்சிறுவன் நடந்து கொண்டானாம்.
அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது என்ற தகவல் தெளிவாகக் கிடைக்கவில்லை. ஆனால், தனது கிறிஸ்துமஸ் பரிசுத் தொகையாகன 250 டாலரை, டெட்ரோய்ட் காவல்துறைக்கு அவர் கொடையாகக் கொடுத்தாராம். அதற்காகக் கூட அவருக்கு இந்த கௌரவம் கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதை படிக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனின், காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை நமது சென்னை மாநகர காவல்துறையினர் நிறைவேற்றியது நினைவுக்கு வருகிறது.