• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் மிக உயரமான மரம்
  2016-02-05 18:14:27  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகிலேயே மிகவும் உயரமான மரம் ஹைபரியான். இது ஒரு செம்மர வகையைச் சேர்ந்தது. இதற்கு முன், மிக உயரமான மரமாக கலிபோர்னியாவின் செம்மரம் கருதப்பட்டது. அது, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, அதனை விட உயரமான மரம் இந்த ஹைபரியான் என்று இயற்கை ஆர்வலர்கள் கிறிஸ் அட்கின்ஸ், மைக்கேல் டெய்லர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த மரத்தின் தோராயமான உயரத்தை அளப்பதற்காக அவர்கள், லேசர் கதிர்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அளவு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மரத்தின் உச்சி வரை ஏறி, அங்கிருந்து நிலம் வரை துல்லியமாக உயரத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த சாகசமான நிகழ்வை, நேஷனல் ஜியோகிராபிக் ஒளிப்பதிவு செய்துள்ளது. இவ்வாறு மரத்தின் மீது ஏறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் அம்மரத்தின் கிளைகள் 25 அடுக்கு மாடிக் கட்டிங்களின் உயரத்தில் உள்ளது. அதுவரை ஏறுவது என்பது மிகவும் கடினமான காரியம். பல்வேறு உபகரணங்களின் உதவியுடன் அவர்கள் மரத்தின் மீது ஏறி, அதன் உயரத்தை துல்லியமாக அளந்து வெற்றி கண்டுள்ளனர்.

அத்துடன், ஹைபரியான் வகையைச் சேர்ந்த மிகவும் உயமரான 3 மரங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மரம், கலிபோர்னியாவின் உயரமான செம்மரத்தை விட சுமார் 10 அடி அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்வையிடவும், அதன் மீது ஏறவும் முனைவர். அவ்வாறு நேர்ந்தால், அது மரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதனைப் பாதுகாக்க ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040