அமெரிக்காவில் நாய்க்குட்டி ஒன்று மாரத்தான் போட்டியில் பங்கேற்று பரிசை வென்றுள்ளது. பந்தய தூரமான 21 கிலோ மீட்டரை வெறும் 1 மணி நேரம் 32 நிமிடங்களில் கடந்து எல்லைக் கோட்டை எட்டி 7 ஆவது இடத்தைப் பிடித்தது.
உடன் ஓடி வந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்த நாய்க் குட்டி பந்தய தூரம் முழுவதும் சளைக்காமல் ஓடி வந்ததாம். நாய்க்குட்டியின் இந்த சாகசத்தைப் பாராட்டி, அதற்கு பரிசுகளும் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.
என்னுடைய நாய்க்குட்டி போட்டியில் பங்கேற்று பரிசை வென்றதா என்று என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்த வண்ணம் உள்ளார் அதன் உரிமையாளர்.