• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின புத்தாண்டு வரவேற்பு
  2016-02-09 16:46:55  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் பாரம்பரிய நாட்காட்டியின்படி இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் நாள் தீ குரங்கு ஆண்டின் துவக்கமாகும். திபெத்தின புத்தாண்டு திபெத்தின மக்களின் ஓராண்டு விழாக்களில் மிக முக்கிய விழாவாகும்.
இப்புத்தாண்டின் பொழுது திபெத் மக்கள் காலையில் எழுந்திருந்து பாரம்பரிய திபெத்தின ஆடைகளை அணிந்து இன்பத்தைக் குறிக்கும் ட்சேமா எனும் உணவு வகையைச் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ட்சாசிதலே என்று வணக்கம் கூறுகின்றனர்.
காசே எனும் உணவு வகை திபெத் புத்தாண்டின் பொழுது ஒவ்வொரு திபெத்தின குடும்பமும் தயாரிக்க வேண்டிய முக்கிய உணவு வகையாகும். காது, வண்ணத்துப்பூச்சி, மலர் ஆகிய வடிவங்களில் இது தயாரிக்கப்படும். பிறகு இது சுண்டல் போல் எண்ணெயில் வறுக்கப்படும். இந்த உணவு சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய பல நிறங்களில் தயாரிக்கப்படும் சிறப்பிற்குரியது. வீட்டில் விருந்தினர்களை உபசரிக்கும் பொழுது இது இன்றியமையாத உணவு வகையாக இருக்கும்.

காசேயைத் தவிர, பல்வகை இனிப்புக்கள், திபெத் எருமை இறைச்சி, பால் தயாரிப்பு பொருட்கள் ஆகியவை திபெத் மக்களின் உணவு மேசையில் காணப்படலாம். சோலாண் தெட்சி என்ற இளம் பெண் உள் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். குளிர்கால விடுமுறையில் அவர் திபெத்துக்குத் திரும்பினார். புத்தாண்டு விழாவுக்கு முந்தைய நாட்களில் அவர் காசே விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

மருத்துவத் துறையில் கல்வி கட்டணம் அதிகமாகும். தவிர திங்கள் செலவு சுமார் ஓராயிரம் யுவான். ஆகவே இங்கே வேலை செய்கின்றேன் என்றார் அவர்.

 புத்தாண்டின் போது ஆடைகள், உணவு பொருட்கள், திபெத்தின கைவினைப் பொருட்கள் முதலியவை சாலைகளிலுள்ள கடைகளில் நிறைய காணப்படும். அவற்றில் திபெத்தின நாட்டுப்புற கைவினை தொழில் நுட்ப மிக்க பொருட்கள் மிகவும் வரவேற்படுகின்றன. திபெத்தின புத்தாண்டின் போது, திபெத்தினத்தின் குடும்பங்களில் பல்வகை தனிச்சிறப்புமிக்க இன்பச் சின்னங்கள் வைக்கப்படுகின்றன. ஐந்து நிறமுடைய கோதுமைக் கதிர்கள், ஆட்டின் தலை, பார்லி செடி முதலியவை அவற்றில் இடம்பெறுகின்றன.

புதிய ஆண்டில் சாதகமான காலநிலை, அமோக அறுவடை ஆகியவற்றை இவை பொருட்படுகின்றன என்று திபெத் மக்கள் நம்புகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் திபெத் இசை நாடகம், கோசுவாங் நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகளும், குதிரை ஏற்றம், அம்பு எய்தல் முதலிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040