பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டி, குழந்தைகளின் சீரான வளர்ச்சியை நாட்டின் அடிப்படை கொள்கையாக மேற்கொண்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல், சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு, சீனத் தேசிய மாணவர்கள் சம்மேளனம், சீனத் தேசிய குழந்தைகள் பணி ஆணையம் ஆகிய வாரியங்கள், இது தொடர்பான ஒரு திட்டப்பணியை மேற்கொண்டு வருகின்றன. சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், உள் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள குழந்தைகள் கடிதம் உள்ளிட்ட பல்வகை வடிவங்களின் மூலம் தொடர்பு கொண்டு நண்பர்களாக மாறியுள்ளனர்.
எமது சின்ச்சியாங்கில் பல காட்சி இடங்கள் உள்ளன. வண்ணத்துப் பூச்சி பள்ளத்தாக்கு அவற்றில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்டு மே மற்றும் ஜுன் திங்களில் மிக அதிக வண்ணத்துப்பூச்சிக்கள் காணப்படும். இங்கே வர உங்களை அழைக்கலாமா? என்று சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் அஹே, வடக்கு சீனாவிலுள்ள ஹெய்லுங்ச்சியாங் மாணவர் காங்ச்சியேனிற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டத் தூரமாக இருந்தபோதிலும், இத்தகைய தொடர்புகள் பல்வேறு தேசிய இன மாணவர்களிடையில் நட்புறவை உருவாக்கியுள்ளன. எனது சொந்த ஊர் நிங்ச்சி நகரிலுள்ள குங்புச்சியாங்தா. வாய்ப்பு இருந்தால் எனது சொந்த ஊருக்கு வாருங்கள். உங்களுக்கு நான் வழிக்காட்டுவேன் என்று ட்சிரன் துங்சோ என்ற திபெத் மாணவி, குவாங்சோ மாணவர் ஒருவருக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.
கடிதங்களில் சொந்த ஊர், பள்ளி, வசிப்பிடத்தின் பழக்க வழக்கங்கள், தேசிய இனங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். பல்வேறு பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் இத்தகைய தொடர்பு மூலம் ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டுள்ளனர்.
மேலும், 2015ஆம் ஆண்டு பெய்ஜிங், தியேன் ச்சின், ஹெபெய் உள்ளிட்ட 17 மாநிலங்களில் பண்பாடு, தேசிய பாதுகாப்பு, அறிவியல் தொழில் நுட்பம், விளையாட்டு, கலை ஆகியவை பற்றி 52 கோடைக்கால முகாம்கள் நடத்தப்பட்டன. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4400 மாணவர்கள் அவற்றில் கலந்து கொண்டனர்.
புள்ளிவிபரங்களின்படி, சின் ச்சியாங்கில் 1127 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 12 இலட்சம் மாணவர்கள் கடிதம் மூலம் தொடர்பு நடவடிக்கையில் கலந்து கொண்டனர். இதுவரை அவர்கள் மொத்தம் 3 இலட்சத்து 41 ஆயிரம் கடிதங்களை அனுப்பியுள்ளனர். திபெத்தில் 129 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் 15 ஆயிரத்து 800 கடிதங்களை அனுப்பியுள்ளனர். கடிதமூல தொடர்பு நடவடிக்கை மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேசிய இன இணக்கம் என்ற கருத்து இதன் மூலம் மாணவர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.