அமெரிக்க-ஆசியான் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளூர் நேரப்படி 16ஆம் நாள் நிறைவடைந்தது. இக்கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் சர்ச்சையை அமைதியாகத் தீர்த்து பிரதேச மற்றும் கடற்பரப்பிலான அமைதியையும் பாதுகாப்பையும்ப் பேணிக்காக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அறிக்கையில் சீனா தொடர்பான அம்சங்கள் இல்லை. தென் சீனக் கடல் பற்றி இக்கூட்டத்தில் ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. அமெரிக்காவும் ஆசியான் நாடுகளும் இரு தரப்புறவை வளர்ப்பதில், இப்பிரதேசத்தில் பல்வேறு தரப்புகளுக்கு இடையில் செயலாக்கப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுங் லேய் 17ஆம் நாள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஒரு சில நாடுகள் தென் சீனக் கடல் பிரச்சினையை வேண்டுமென்றே பெரிதாக்கியது குறித்து அவர் கூறியதாவது
பெரும்பான்மையான ஆசியான் நாடுகள் சில நாடுகளின் குற்றச்சாட்டை ஆதரிக்கவில்லை. தொடர்புடைய நாடுகளுக்கிடையில் ஒன்றின் மீதான ஒன்றின் நம்பிக்கையை இச்செயல் பாதிக்கும். தென் சீனக் கடல் பரப்பில் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் முயற்சியையும் இது பாதிக்கும் என்று பல நாடுகள் கருதுகின்றன. பிரதேச அமைதி மற்றும் நிதானத்தை ஆசியான் நாடுகளுடன் இணைந்து பேணிக்காக்க, தொடர்புடைய சர்ச்சையை அமைதியான முறையில் தீர்க்கப் பாடுபட சீனா விரும்புவதாக ஹுங் லேய் கூறினார்.
இவ்வாண்டு சீனாவுக்கு ஆசியான் அமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை உறவு நிறுவப்பட்ட 25ஆம் ஆண்டாகவும், இரு தரப்பு கல்விப் பரிமாற்ற ஆண்டாகவும் திகழ்கின்றது. இது தொடர்பாக இவ்வாண்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஆசியான் சமூகத்தின் கட்டுமானத்துக்கு சீனா உறுதியான ஆதரவு வழங்கும் என்றும், இரு தரப்பு ஒத்துழைப்பைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் அதேவேளையில், இப்பிரதேசத்தன் கூட்டு வளர்ச்சியையும் முன்னேற்றும் என்றும் ஹுங் லேய் கூறினார்.
தென் சீனக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் இடத்தில் அமெரிக்கா தொடர்ந்து கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா இக்கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இது பற்றி ஹுங் லேய் கூறியதாவது
அமெரிக்கா தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்புடைய நேரடி தரப்பு அல்ல. ஆகவே, அது கவனமாக பேசி செயல்பட வேண்டும். இப்பிரச்சினையுடன் நேரடி தொடர்புடைய தரப்புகளுக்கு சீரான பேச்சுவார்த்தைச் சூழ்நிலையை உருவாக்க வேண்டுமே தவிர, இப்பிரதேசத்தில் நிலைமையை மோசமாக்க்க் கூடிய செயல்களில் ஈடுபட கூடாது என்று ஹுங் லேய் குறிப்பிட்டார்.